Thursday 8 February 2024

பழி போடும் பழக்கம் . . .

 பழி போடும் பழக்கம் . . .

_*வாழ்வதற்கு தான்
பணம் வேண்டும்..
மதிப்பதற்கு
நல்ல மனம் இருந்தாலே போதும்.*_
_*அறியாமல்*_
_*இருப்பது தவறல்ல.*_
_*அறிய முயலாமல்*_
_*இருப்பது தான் தவறு.*_
எப்போதும்
பணத்தின் பின்பு ஓடினால் வாழ்க்கையை அழகான
தருணங்களை கண்டிப்பா தொலைச்சிடுவோம்.
எனக்கு ரெண்டு கண் போனாலும் பரவால்ல. அடுத்தவங்களுக்கு ஒரு கண்ணாவது போகணும்ங்குற எண்ணம்.
அவன் நல்லா வாழறான். நம்ம வாழமுடியிலயேன்னு ஒப்பிட்டு கொண்டிருப்பது.
எல்லா விஷயத்துலயும் ஒரு நெகடிவிட்டியோட பாக்குறது.
அடுத்தவர்களின்
பார்வையிலிருந்து நம்
வாழ்க்கையை செதுக்குவது.
மற்றவர்கள் கஷ்டபட்டா என்ன
நாம நல்லா வாழ்ந்தா போதும் நினைக்குற எண்ணம்.
நம்மிடம் உள்ள பிழைகளை
பார்க்காமல் மற்றவரைக் குறை கூறுவது.
உலகத்தில் இருக்குற கஷ்டம் எல்லாம் நமக்கு மட்டும் தான் இருக்குன்னு நெனச்சிக்க வேண்டியது.
ஏதாவது வாழ்க்கையில் பிரச்சனை வந்தா அதை எப்படி சரி செய்யலாம்னு பார்க்காமல் நேரத்தின் மீது பழி போடுவது.
எதுக்காக பொறந்தோம். நம்மளால யாருக்கு பயன். நம்ம வாழறதே வேஸ்ட் அப்படின்னு நினைப்பது ரொம்ப தப்பு.
மற்றவர்கள்
தன்னைப் பற்றிக் கூறுவதை நம்பி தன்னைத் தானே தாழ்த்தி கொள்வது.
எனக்கு அப்படி நடந்துட்டு, இப்படி நடந்துட்டுன்னு முடிந்த விஷயத்தை நினைத்து புலம்புவது.
இவையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
*படித்து*
*பட்டம் வாங்க வில்லை*
*பறவைகள்...*
*இருப்பினும்*
*அவைகள்*
*பாதை மாறுவதில்லை.*

No comments:

Post a Comment