Saturday 17 February 2024

ஆனந்த அமுதம் மணவிழாவின் தமிழ் உலா விற்குப் பாராட்டு.

 ஆனந்த அமுதம்

மணவிழாவின் தமிழ் உலா விற்குப் பாராட்டு.
தம்பிக்குப் இனிய வணக்கம்,
தங்கள் இல்லத் திருமண
விழாவை மிகவும் சீரோடும், சிறப்போடும், மிகவும் நேர்த்தியாகவும் நடத்தி உள்ளீர்கள்.
மகிழ்ச்சி.
முழு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்க வேண்டும்,
உடல்நிலை காரணமாக வர இயலாமைக்கு வருந்துகிறேன். ராம்குமார் - நாச்சாமை தேவி பூஜா தம்பதி பதினாரும் பெற்று பொரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
' ஆனந்த அமுதம் ' சில ஆன்மீக பாடல்களை தவிர முழுவதும் படித்தேன். ' தேன் துளி ' தேனை அருந்திய சுகமான அனுபவம் கிடைத்தது.
' பொழிவின் பிழிவு ' அத்தனையும் நல்ல கருத்துக்கள்,
நேரில் கேட்ட சுகம் கிடைத்தது
' நல்ல வண்ணம் வாழ்வோம் ' வாழ்க்கைக்கு தேவையான சித்தார்த்தங்கள், எந்த வயதிலும் சந்தோசமாகவும், தன்னம்பிக்கையுடனும் வாழ முடியும் என்கின்ற நுணுக்கங்கள் மிகச்சிறப்பு.
மொத்தத்தில் " அமுதம் ஆனந்தமே ". அலமேலு ஆச்சியும் தாங்களும் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு காலம் வாழ்க என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
வணங்குகிறேன். நன்றிங்க.

No comments:

Post a Comment