Monday 5 February 2024

அனுபவமும் பக்குவமும் . .

 அனுபவமும் பக்குவமும் . .

பொதுவாக
நாம் அனைவரும் எப்படிச் செயல் செய்கிறோம் என்று பார்ப்போம்.
இந்தச் செயல் செய்தால் நமக்கு நல்லது. அதன் மூலம் நமக்கு இன்பம் கிடைக்கும் என்று செயல் செய்கிறோம்.
அல்லது இந்தச் செயலை செய்தால் நமக்கு துன்பம் விளையும்.
அதனால் அதிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று பிளான் பண்ணி அந்தச் செயலை செய்ய முற்படுகிறோம்.
அதாவது நல்லது (இன்பம்)வேண்டும் என்று விரும்புகிறோம் அல்லது துன்பம் வேண்டாம் என்று விரும்புகிறோம்.
இன்பத்தை விரும்பும்
இந்த எதிர்பார்ப்பு அல்லது ஆசையை இன்பநாட்டம் என்கிறோம்.
இந்த இன்ப நாட்டமே நமது அனைத்து துயர்களுக்கும் காரணம் என்கிறார்கள்.
அதை நாம் ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று தவறாகப் புரிந்து கொண்டோம்.
இந்த பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயலைக் கைவிட வேண்டும் என்பதைத் தான் கீதையில் கண்ணன். "கடமையை செய்.
பலனை எதிர்பார்க்காதே."என்று சொன்னார் .
எல்லா மதமும் அனைத்து மகான்களும் இதையே வெவ்வேறு மொழியில் வேறு வேறு மாதிரிச் சொன்னார்கள்.சொல்கிறார்கள்.
ஆனால் நாம் தான் அதைத் தவறாகப் புரிந்து கொண்டு தவறாய் செயல் படுகிறோம்.
உண்மையில் நாம் இன்பத்தை எதிர் பார்த்தோ அல்லது துன்பத்தை
தவிர்க்கவோ செயல் செய்ய வேண்டியதில்லை. இந்தக் கணம் இப்போது செய்ய வேண்டிய செயலை மட்டும் செய்தால் போதும்.
நம்மால் ஏதும் செய்ய முடியாது ,நடப்பது அனைத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.அதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற ஏற்றுக் கொள்ளும் தன்மை தான் வாழ்கையின் அடிப்படைக் கல்வி.
இதை புரிந்து கொண்டால் நீங்கள் பாஸ் ஆகி விட்டீர்கள்.அதாவது உங்களுக்கு எண்ணும் எழுத்தும் தெரிந்து விட்டது.
இனி அ, ம், மா அம்மா என்று எழுதப் படிக்க ஆரம்பிக்க வேண்டும். எழுத படிக்க கூட்டிக் கழித்துக் கணக்குப் போடத் தெரிந்து விட்டால் ஸ்கூல் படிப்பு முடிந்து விட்டது என்று பொருள்.
அதாவது சூழ்நிலையை
ஒன்றும் செய்ய முடியாது என்பது தெரிந்த பின் அடுத்த பாடம் அதை எதிர்கொள்வது தான்.
போலீஸ்காரரைக் கண்டு பயந்து ஓடாமல் நேருக்கு நேர் எதிர் கொள்ள வேண்டும். ஓடக்கூடாது.
தப்பிக்க நினைக்கும் மனோபாவத்தை மாற்ற வேண்டும்.
நாம் தான்
எதையும் ஏற்றுக் கொள்ளும்
பாடத்தை கற்றுக் கொண்டு விட்டோமே. அப்புறம் என்ன.
எதையும் விவேகமாய் எதிர் கொள்ளத் தெரிந்தால் போதும். அந்த தைரியம் வந்து விட்டால் நமது வாழ்கைக் கல்வியில் பள்ளிப் பாடம் முடிந்து விட்டது என்று அர்த்தம்.
அடுத்தது காலேஜ் தான். ஸ்கூல் படிப்பு வரைக்கும் வாத்தியார் சொன்னத தான் எழுதணும். அவரு சொல்லிக் கொடுத்த மாதிரித் தான் எல்லாம் பண்ணனும் .
அப்ப தான் பாஸ் பண்ண முடியும்.(விதி விலக்காய் சில பள்ளிகள் உண்டு)
காலேஜ் போனால் நமக்குப் புரிந்ததை நமக்கு புரிந்த மாதிரி எழுதக் கொஞ்சம் சுதந்திரம் உண்டு.
இது வரைக்கும் நீங்க படிச்சத வச்சு உங்க அனுபவங்களை செயல் படுத்தி பார்க்கலாம்.ஒவ்வொரு அனுபவமும் உங்களுக்கு நல்ல பக்குவத்தைத் தரும்.
நமது சொந்த அனுபவங்கள்,
பிறரது அனுபவங்கள்,
பிரபலமானவர்களின் வாழ்கை
மற்றும் சரித்திரங்கள் படித்து மேலும் நம்மை பக்குவப்படுத்திக்
கொள்ளலாம்.அதை நம் வாழ்வில் பயன் படுத்திப் பார்க்கலாம்.
இந்த அனுபவங்கள் மூலம் சூழ்நிலைகளைக் கையாளப் பழகி விட்டால் வாழ்கையில் கல்லூரி காலத்தைக் கடந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
அடுத்தது வேலை தான்.
இந்த வேலை கிடைத்து விட்டது
என்றால் நீங்கள் சம்சார சாகரத்தில் நீந்தத் தயார் என்று அர்த்தம்.
இனி வாழ்க்கையில்
எதையும் எதிர் கொள்ள முடியும்.
எந்தச் செயலையும்
செய்யும் ஆற்றல் வந்து விடும்.

No comments:

Post a Comment