Monday 19 February 2024

பூர்வீகக் குடிகளின் மதி நுட்பம்.

 பூர்வீகக் குடிகளின் மதி நுட்பம்.

கி.பி. 1521ல் பிலிப்பைன்ஸ் தீவில் இருந்த ஆதிகுடிகள் வாழ்நாளில் இதுநாள் வரை கண்டிராத காட்சியை கண்டார்கள்.
நாலு பெரிய கப்பல்கள், அதில் ஏராளமான பீரங்கிகள், துப்பாக்கி ஏந்திய வெள்ளை மனிதர்கள், உடலெங்கும் இரும்புக்கவசம், கையில் இரும்பால் ஆன வாள், ஈட்டி, பயோனெட்டுகள்.
ஆதிகுடிகளிடம் இருந்தது
மூங்கிலால் ஆன அம்புகள், வேல், வில் அம்புகள் தான்.
கப்பலின் மாலுமி
மெகெல்லன்.
உலகை முதலில் சுற்றி வந்தவர். கொலம்பஸை
மிஞ்சும் கேப்டன்.
"ஸ்பானிய அரசரை தலைவராக ஏற்றுக்கொண்டு கப்பம் செலுத்தினால் மன்னித்து
விட்டுவிடுகிறேன்" என்றார்.
இன்று ஒரு ஏலியன் விண்கலம் நாம் கண்டிராத ஆயுதங்களுடன் வந்து நம்மிடம் சரண்டையச் சொல்வதுபோல் தான் அது. பீரங்கிகள் விண்ணில் வெடித்து பயம் காட்டின,
துப்பாக்கிகள் சுடபட்டன.
வேறு யாராக இருந்தாலும்
சரணடைந்து உயிர் பிழைத்திருப்பார்கள்.
ஆனால்
பூர்வகுடிகளின் தலைவன்
லாபு-லாபு
மாவீரன் மட்டுமல்ல, மிகச் சிறந்த ராஜதந்திரியும் கூட.
வாழ்நாளில்
இதுநாள்வரை கண்டிராத
ஆயுதங்களைக் கண்டாலும் விரைவில் அவற்றை எடைபோட்டார்.
கப்பலில் இருக்கும் பீரங்கிகளை தரையில் இறக்கமுடியாது. தரையில் முழுக்க பாறைகள். பீரங்கிகள் ரேஞ்சில் அவர்கள் குடியிருப்பு இல்லை.
துப்பாக்கிகள் தான் பயமுறுத்தின. ஆனால் அவற்றைத் தாண்டி அவர்களை நெருங்கினால் ஸ்பானியர்களின் கவசம் இருக்கிறது. ஆனால் அவர்களின் கால்களில் கவசம் இல்லை.
மேலும்
மெகல்லன் கம்பீரமாக இருந்தார்.
அவர் ஒரே ஒருவரை வீழ்த்தினால் போதும். போரில் வென்றுவிடலாம்.
கணக்குப்போட்டு
சரண்டைய மறுத்தார் லாபு-லாபு
போர் துவங்கியது..
கணக்குப் போட்டது போல் பீரங்கிகளால் கரையில் இருப்பவர்களைச் சுட முடியவில்லை. படகுகளில் ஏறி 135 ஸ்பானியர்கள் கரைக்கு துப்பாக்கியால் சுட்டபடி விரைந்தார்கள்.
முதலில் துப்பாக்கி படை கரை இறங்கியது. அவர்கள் அங்கிருந்தபடி பூர்வகுடிகளை நோக்கிச் சுட்டார்கள்.
துப்பாக்கி ரேஞ்சை அழகாக கணக்கிட்டு அதற்கு கொஞ்சம் தள்ளி, தள்ளி தன் படைகளை நிறுத்தினார் லாபு-லாபு. அரைமணி நேரம் சுட்டபின் குண்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.
அதன்பின் தன் 1500 வீரர்களிடம் ஒரே கட்டளை மட்டுமே பிறப்பித்தார் லாபு-லாபு.
"வேகமாக ஓடுங்கள். 1500 பேரும் குறிவைத்து மெகல்லன் ஒருவரை மட்டுமே கொல்ல முயலவேண்டும். வேறு யாரையும் தாக்கக்கூடாது. ஸ்பானியர்கள் குறுக்கே வந்தால் அவர்கள் கால்களில் அம்புவிடுங்கள், ஈட்டியால் குத்துங்கள்.."
1500 பேரும் பாய்ந்தார்கள்.ஸ்பானியர்கள் அலட்சியமாக மூங்கில் ஈட்டிகளை கவசம், பயோனெட்டை வைத்து தடுக்க, ஈட்டிகள் அவர்கள் கால்களில் இறங்கின. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல நேராக மெகல்லனை நெருங்கி ஈட்டியால் காலில் ஒரு குத்து.
அவர் கீழே விழுந்தார்.
விஷ அம்பு ஒன்றை காலில் ஏவி
அவர் கதையை முடித்தார்கள்.
மீதமிருந்த ஸ்பானியர்கள் அதன்பின் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என படகுகளில் ஏறி கப்பலுக்கு தப்பி ஓடினார்கள். மெகெல்லன் பிணமாக பூர்வகுடிகளிடம் இருந்தார். தட்டுத்தடுமாறி ஸ்பானியர்கள் அதன்பின் ஸ்பெயின் வந்து சேர்ந்தார்கள்.
அதன்பின் 44 ஆண்டுகள் லாபு-லாபு உயிருடன் இருந்தவரை பிலிப்பைன்ஸை வெற்றிகொள்ள முடியவில்லை.
இன்று அவர் பிலிப்பைன்ஸின் தேசிய ஹீரோ. பிலிப்பைன்ஸில் அவரது சிலைகளைப்
பல இடங்களில் காணலாம்.
மூங்கிலை ஆயுதமாக கொண்ட குடிகளில் இருந்து இப்படி ஒரு ராஜதந்திரியும், மாவீரனும் உருவாவார்கள் என யாரேனும் கற்பனையாவது செய்து பார்த்திருக்க முடியுமா.
*நம் வாழ்க்கையிலும்
இப்படித்தான்....*
*நாம் சந்திக்கும் பிரச்சனையின் மையப்புள்ளி எதுவோ
அதை வீழ்த்தி விட்டால் போதும்...*
*எந்தச் சூழ்நிலையையும்
நம்மால் வெற்றி பெற முடியும்.*

No comments:

Post a Comment