Tuesday 20 February 2024

ஜெயிக்கலாம் கலக்கலாம் . .

 ஜெயிக்கலாம் கலக்கலாம் . .

கடினமாக உழைத்தும்
உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கவில்லை என்றால்
வாழ்க்கையில்..
நீங்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு உங்களை நகர்த்தவில்லை.
உங்களுடைய சிந்தனைகளை மேம்படுத்தவில்லை.
உங்களைச் சுற்றி உள்ள உலகத்தை சரியாகக் கவனிக்கவில்லை.
படித்தவர்கள்,
விவரம்அறிந்தவர்கள்,
உங்கள் மீது அக்கறை உடையவர்கள் யாருடைய தொடர்பிலும்
நீங்கள் இல்லை.
உழைப்புக்குப் பின்; உங்களுடைய தினசரி வாழ்க்கையில்,
வெளிமுக பொழுதுபோக்கில் மட்டுமே தன்முனைப்பாக இருக்கிறீர்களே அன்றி உங்களைப் பற்றிய
உள் முகசிந்தனை இல்லை.
மொத்தத்தில் உங்களுக்கு விழிப்புணர்ச்சி இல்லை.
சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளையாகவும், செய்வதையே செய்யும் கை பிள்ளையாகவும்
மட்டுமே இருக்கிறீர்கள்.
இதையெல்லாம் மாத்துங்க.
உங்கள் தொழிலில் மேலும் அதிகப்படியான_அறிவு சார்ந்த புதிய விஷயங்களை தெரிஞ்சுக்கங்க. இதுவரை உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைவிட மேலும் நிறைய விஷயங்களைப் பழகிக்கிங்க.
உழைப்பது தினசரி 12 மணி நேரம் என்றால் இனி வரும் எதிர்காலத்தை எப்படி மாற்ற வேண்டும்
எப்படி வளர்க்க வேண்டும்,
உயர்த்த வேண்டும் என்பதை சிந்திக்க அடுத்த 12 மணி நேரத்திற்கு தயாராகுங்க.
நல்லா யோசிங்க
சீக்கிரம் முடிவுக்கு வாங்க
முயற்சி பண்ணுங்க நீங்களும் ஜெயிக்கலாம், கலக்கலாம்.

No comments:

Post a Comment