Tuesday 6 February 2024

உண்மையா அவசியமா நாகரீகமா ...

 உண்மையா அவசியமா நாகரீகமா ...

ஒருவனுக்கு
நேரம் சரியில்லை என்றால்,
அதை நல்லதாகவோ,
கெட்டதாகவோ மாற்றுவது
அவனுடைய நாக்கு மட்டுமே.
உங்களின் துன்பக் கதையை எல்லோரிடத்திடலும் சொல்லாதீர்கள்.
அதுவே பலருக்கு
இன்பக் கவிதையாக இருக்கலாம்.
நீங்கள் பேசுவதற்கு முன்,
உங்கள் வார்த்தைகள் மூன்று வாயில்களைக் கடந்து செல்லட்டும்:-
இது உண்மையா
இது அவசியமா
இது நாகரீகமா
சூழ்நிலைகள் மாறும் போது பலரது வார்த்தைகள் மாறும், சிலரது வாழ்க்கையும் மாறும்.
பேச்சில் கவனமாக இருங்கள்.
_*செய்ய முடிந்தும் விரும்பாதவனுடைய செல்வம் மோசமான முறையில் அழிந்து போகிறது. அவனுடைய மரணமும் அப்படியே.*_
_*செய்ய விரும்பி முடியாதவனுடைய நிலை முடிவில் நிம்மதியடைகிறது. காரணம், அவனிடம் இல்லை என்பது அவனுக்குத் தெரியும், ஆண்டவனுக்கும் தெரியும்.*_
_*இதுவரையில் தர்மம் செய்யாத பணக்காரன் நிம்மதியாகச் செத்ததும் இல்லை; அவன் சந்ததி அந்தச் செல்வத்தை அனுபவித்ததும் இல்லை.*_
_*மரணத்தை இறைவன் ரகசியமாய் வைத்திருப்பதால்தான் மனிதன் ஓரளவாவது மனிதாபிமானத்தோடு நடந்துகொள்கிறான்.*_
வாழ்க்கை விலை மிகுந்த
ஒரு வாய்ப்பு.
ஆனால் அதன் மதிப்போ
வாழ்வோரைப் பொறுத்தது.
வாழ்க்கை என்பது நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் தளம் அல்ல.
பல திருப்பங்களை எதிர்பாராமலே அரங்கேற்றும் மேடை.
வாழ்க்கையில்
பல வாய்ப்புகள் வரும்.
ஆனால் சில வாய்ப்புகள் தான் வாழ்க்கையையே தரும்..
வாய்ப்புகளை நழுவவிடாதீர்கள்.
எதற்கும் தயாராக இருங்கள்.
ஒருநாள் உங்களுக்கான
வாய்ப்பு வந்தே தீரும்.

No comments:

Post a Comment