Friday 23 February 2024

வாழத் தெரிந்தவர்கள்

 வாழத் தெரிந்தவர்கள் . .

_*விண்ணில் பாயும்*_
_*விண்கலம் ஆயினும்,*_
_*மண்ணில் வாழும் மனிதர்கள் ஆயினும்,*_
_*சோதனைகளைக் கடந்தால் மட்டும் தான்,*_
_*சாதனை படைக்க முடியும்.*_
_*சாதனையைத் தான் ஊர் பாராட்டும்...*_
_*சோதனையைத் தாங்குவதற்கு உன்னை நீ பாராட்டிக் கொள்....*_
_*போதனைகள் தாங்கி*_
_*நீ பயணித்தால்,*_
_*சாதனைகள் உன் சரித்திரப் பயணத்தில்...‌*_
_*வெற்றி நிச்சயம்!*_
சிப்பிகளை வேண்டுமானால் கடற்கரையில் சிரமமின்றி எடுக்கலாம். ஆனால், முத்து எடுக்க கடலில் மூழ்கத்தான் வேண்டும்.
முதல் தடவையிலேயே முத்து கிடைக்காவிட்டால், மறுபடியும் இன்னும் கொஞ்சம் மூச்சு பிடித்து ஆழ் கடலில் மூழ்கினால் தான் முத்து எடுக்க முடியும்.
நீங்கள் ஆயிரம் முறை வீழ்ந்தாலும் தோற்பதில்லை. ஆனால் பின்வாங்க ஒரு முறை யோசித்தாலும் தோற்கத் தொடங்கி விடுவீர்கள்.
உங்கள் முயற்சிகள் உங்களைப்
பல முறை கைவிட்டிருக்கலாம். ஆனால் நீங்கள் ஒரு முறை கூட உங்கள்
முயற்சியைக் கைவிடாதீர்கள்.
_*புத்தகங்களை சேமித்து வைப்பதை விட, புத்தகத்தில் உள்ளவைகளை புத்தியில் சேமிக்கப்பட வேண்டும்..*_
_*இது வரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும் என யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்.*_

No comments:

Post a Comment