Saturday 24 February 2024

புகழ் தலைக்குள் ஏறக் கூடாது.

 புகழ் தலைக்குள் ஏறக் கூடாது.

*_உழைப்பு சுறுசுறுப்பானது_*
*_அது வசதிகளையும்_*
*_நன்மதிப்பையும்_* *_பெற்றுத்_*
*_தருகிறது..!!_*
*_தேவையற்ற எண்ணங்களை_*
*_நீ சுமக்கும் வரை_*
*_உன் வாழ்வில்_*
*_நிம்மதி என்பது_*
*_இருக்கவே இருக்காது..._*
பேச்சுத்திறமை என்பது
சரியான இடத்தில்
சரியான சமயத்தில்
சரியாகப் பேசுவது மட்டுமல்ல.
தவறான வார்த்தைகளைப்
பேசிவிட வேண்டும் என்று
மனம் துடிக்கும்போது
பேசாமல் இருப்பதும் தான்.
நீ வாயைத் திறக்கும் போதெல்லாம்
உன் உள்ளத்தைத் திறக்கிறாய்
ஆகவே
கவனமாக இரு.
கோபத்தில் நாக்கு வேலை செய்யும் அளவுக்கு
மூளை வேலை செய்யவது இல்லை.
குறை சொல்பவர்களுக்கு விளக்கம் சொல்லி நேரத்தை
விரையம் ஆக்காமல்,
அவர் அவர் மனம் போல் எண்ணிக் கொள்ளட்டும் என்று எண்ணி நகர்ந்து விடுவது தான் நல்லது.
_*மனிதர்கள் உனக்காக கை தட்டுகிறார்கள் என்பதை பார்த்து பெருமைபட்டுக் கொள்ளாதே.*_
_*நீ பெருமையில் கொஞ்சம் ஓய்வெடுக்க நினைத்தாலே*_
_*உனக்காக தட்டிய அதே கைகள்*_
_*உன்னை அப்படியே பிடித்து கீழே தள்ளிவிடும்.!*_
_*என்றைக்கும் பணிவாக இரு..*_
_*புகழை தலைக்குள் ஏற்றிவிடாதே*_.!
_*ஆடம்பரத்தை விரும்புவது தவறில்லை,*_
_*ஆனால் ஆரம்பத்தை மறப்பது தான் மிகவும் தவறு.*_

No comments:

Post a Comment