Friday 2 February 2024

திரியின் தியாகம் . .

 திரியின் தியாகம் . .

*_வாழ்க்கை சுவையாக மாற இந்த இரண்டு பண்பாடுகள் கடை பிடியுங்கள்_*
நமக்கு ஒருவர் செய்த உதவியை இயல்பாக மறந்து விடுவது தவறல்ல.
ஆனால்
நினைக்க வாய்ப்பு வரும்போதும், அதைப்
புறக்கணிப்பதுதான் பெரிய தவறு.
இதைத்தான்
நன்றி மறத்தல் என்கிறோம்.
நன்றி மறத்தலால்
பலர் உள்ளம் பாதிப்படைகிறது.
பாதிப்படையும் உள்ளம் வருந்துவதால், தெரிந்தோ தெரியாமலோ சாபம் வந்து சேர்வதாகப் பெரியோர்கள் எச்சரிக்கிறார்கள்.
நாம் வெற்றி பெற
ஆசீர்வாதங்களே தேவை.
1.நான் எனது வாழ்நாளில்
யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தரமாட்டேன்.
2. துன்பப்படுவோருக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.
என வேதாத்திரி மகரிஷி அவர்கள் இரண்டொழுக்கப் பண்பாட்டை அருளியுள்ளார்.
இந்த இரண்டு
பண்பாடுகளைக்
கடைபிடித்தால் போதும்.
வாழ்க்கை
சுவையாக மாறுவதை உணரலாம்.
நாளை செய்யலாம்,
பேசலாம் என விஷயங்களைத்
தள்ளி போடாதே, ஏனென்றால் நாம் பேச இருக்கும் மனிதர் இல்லாமல் போகலாம் அல்லது நாமே இல்லாமல் போகலாம்.
ஏமாற்றுவதைக் காட்டிலும்
தோற்றுப் போவது
மரியாதைக்குரியது.
நீங்கள் தேவைபடாது என்று தீர்மானித்தபின் உங்களை ஒதுக்கபடுவது ஒன்றும் ஆச்சரியமில்லை.
வெளிச்சம் கிடைத்தவுடன்
திரியின் தியாகம்
யாருக்கும் தெரிவதில்லை.
நல்லது எது,
கெட்டது எது என
சிந்திக்கத் தெரியாத மனிதன்
தனக்கு மட்டுமல்ல,
மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்.

No comments:

Post a Comment