Wednesday 21 February 2024

பிரச்சினை இல்லாத மனிதன் யார்.

 பிரச்சினை இல்லாத மனிதன் யார்.

_*மகிழ்ச்சி என்பது எங்கோ*_
_*தயாரிக்க படுவதல்ல..*_
_*அது நம்*_ _*செயல்களிலிருந்தே*_
_*வருகிறது..*_
_*நம் அனுபவத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் இன்பம் நிரந்தரமானதாக இருக்கும். அதேபோல நம் அனுபவத்தில் இருந்து நமக்குத் துன்பம் கிடைக்கும் பட்சத்தில் நாம் அடுத்த முறை அந்தத் துன்பம் ஏற்படாத வண்ணம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.*_
மற்றவர்கள் மீது
பழி சொல்லாமல்
வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை என்பது
முழுவதுமாக நீங்கள் அதை எந்த கோணத்தில் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உள்ளது.
நடப்பதற்கெல்லாம்
மற்றவர்கள் மட்டுமே பொறுப்பாக மாட்டார்கள்
அதில் நம் பங்கும் உள்ளது.
பிடித்தவர் என்பதற்காகப்
பிழைகளை சுட்டிக்காட்டத் தவறாதீர்கள். பிடிக்காதவர் என்பதற்காக
நல்லவற்றை தவறாகப் பரப்பாதீர்கள்.
முடிந்து போன நொடியை விட
அடுத்த நொடியை
இன்னும் சிறப்பாக்க முயற்சி செய்தால் போதும் உங்கள் வாழ்க்கை
தன்னால் மாறும்.
_*சந்தோஷமாக இருப்போம்!*_
_*போகும்போது எதையும் எடுத்துக்*_
_*கொண்டு*_ _*போகப்போவதுமில்லை.*_
_*இருக்கும் போது நம்முடையதை தவிர எதையும் இழக்கப்போவதில்லை*_
_*மிகவும் தேவையுள்ளதற்கு செலவு செய்ய*_ _*வேண்டியவற்றிற்கு*_
_*செலவு செய்யுங்கள்*_
_*மகிழ்ச்சியாக*_
_*இருக்கவேண்டிய*_ _*நேரத்தில்*_
_*மகிழ்ச்சியாக*_ _*இருங்கள்*_
_*ஒவ்வொரு குடும்பத்திலும்,*_
_*ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பிரச்னை இருக்கும்*_
_*பிரச்னைகள் இல்லாத மனிதர் யார்*_
_*நீங்கள் உங்களுக்கான மகிழ்ச்சியான சூழ்நிலையை*_ _*உருவாக்கி*_
_*எப்போதும்*_
_*மகிழ்ச்சியாக இருங்கள்*_

No comments:

Post a Comment