Thursday 1 February 2024

வேலையில் கண்ணும் கருத்தும் .

 வேலையில் கண்ணும் கருத்தும் .

எறும்புகள் வரிசையா உணவு எடுத்துக்கிட்டுப் போவதை பார்த்திருப்பீங்க.
அப்போ காத்தடிச்சோ இல்லை தண்ணிப்பட்டோ இல்லை மனுஷங்க நாமே அதை கலைச்சி விட்டு விடுவோம். ஆனால் அது சோர்ந்து போய் என்னைக்காவது பார்த்திருக்கீங்களா, எத்தனை முறை கலைந்து போனாலும் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்கும்.
சிலந்தி வலை பிண்ணி வைத்திருக்கும். அதை எத்தனை முறை பிய்த்து எறிந்தாலும். அடுத்த நாள் மறுபடியும் அழகாகக் கட்டி வைக்கும்.
அதனுடைய உழைப்பு வீணாகிவிட்டதென்று நிறுத்தாது.
இதெல்லாம் எதுக்கு தேனீக்கள் வாழ்நாள் முழுதும் கஷ்டப்பட்டு தேனைச் சேர்க்கும். அதை அதாலயே சுவைக்க முடியாது. அதுக்குள்ள நாம எடுத்துப்போம். இருந்தாலும் நமக்கு இல்லாததை நாம் ஏன் சேமிக்கணும்னு நினைக்குதா என்ன, அது வேலையில் கண்ணும் கருத்துமாய் தானே இருக்கு.
ஒரு விதையை மண்ணில் போட்டு புதைத்தாலும் முட்டி மோதி வெளியே வந்து வெளி உலகைப் பார்க்கத் தான் செய்யுது. புதைச்சு வைச்சிட்டாங்கன்னு அப்படியே மடிந்து போகுதா.
உடைந்து போகும் கண்ணாடி நாம் உடைந்து விட்டோம் என்று மனம் உடைந்து போவதில்லை. தன்னை உடைத்தவர்கள் பிம்பத்தை உடைந்த ஒவ்வொரு துண்டிலும் பிரதிபலிக்கிறது கெத்தாக.
கரைந்து போகும் மெழுகுவர்த்தியோ தனக்கான நேரம் சிறியது என்று தன் வேலையை நிறுத்துவதில்லை. கடைசி வரை தன்னுடைய பணியைச் சிறப்பாகவே செய்கிறது.
ஈசலுடைய ஆயுட்காலம் ஒரு நாள் தான். சாகுற நாள் தெரிஞ்சா வாழுற நாள் நரகம் ஆயிடும்னு சொல்லுவாங்க. ஆனாலும் ஈசல் சிறகை விரிச்சித் தான் பறக்குது. தன்னுடைய நேரத்தை முழுமையாக பயன்படுத்தி மகிழ்ச்சியாக தான் இருக்கு.
எறும்பை விடவா நீங்கள் அதிகமா உழைச்சிட்டிங்க.
சிலந்தியை விடவா நீங்கள் அதிகம் பொறுமையா இருந்துட்டீங்க.
உடைந்த கண்ணாடிகளைப் பாருங்கள். இதை விடவா உங்கள் மனம் உடைந்து விட்டது. தூக்கிப் போட்டாலும் பிரதிபலிப்பதை நிறுத்தவில்லையே.
விதை முட்டி மோதி வெளியே வந்து உயர வளர்ந்து நிற்கும். தன்னை புதைத்தவர்களை அன்னாந்து பார்க்க வைக்கும்.
இதையெல்லாம் விடவா நீங்க அதிக உழைத்து விட்டீர்கள்.
*உயிர் உள்ளதோ உயிர் அற்றதோ இந்த உலகில் உள்ள அனைத்தும் அதனதன் பாணியில் ஏதோ ஒரு பாடத்தை நமக்கெல்லாம் உணர்த்திக் கொண்டு தான் இருக்கிறது.*
All reactions:
Krishna Raman and 4 others

No comments:

Post a Comment