Wednesday 14 February 2024

மனநிலை அறிந்து பேசுவது.

 மனநிலை அறிந்து பேசுவது.

_*இயல்பான
குணங்கள் மட்டும் தான்.*_
_*அனைவருக்குமே
சிறந்த ஆடைகள்.*_
சாவியைத் தொலைத்து விட்டு பூட்டிற்கு தண்டனை கொடுக்கும் உலகம்.
தண்டிக்க தெரிந்த ஒருவருக்கு
தவறு யாருடையது
என்று தெரிவதில்லை.
தவறு செய்தால் மட்டும் அல்ல,
தவறான மனிதருக்கு நல்லது செய்தாலும்
வருந்தித்தான் ஆக வேண்டும்.
எதை வேண்டுமானாலும்
விட்டுக் கொடுங்கள்
ஆனால் அது யாருக்காக விட்டுக் கொடுக்கிறோம் என்று
தெளிவாக இருங்கள் .
அறிவு என்ற சுடரை
நீ அணையாமல் பார்த்துக் கொள்,
உன் வாழ்க்கை
வெளிச்சமாக இருக்கும்.
_*ஒருவரை வார்த்தையால் காயப்படுத்துவதற்கு முன் அவரின் சூழ்நிலை, அவரின் மனநிலை அறிந்து பேசுவது மிகவும் நல்லது.*_
_*அடியைக் கூடப் பொறுத்துக் கொள்ளும் இதயம்
சிலரின் வார்த்தைகளைப் பொறுத்துக் கொள்வதில்லை. எத்தனைமுறை மன்னிப்புக் கேட்டாலும் காயங்கள் மாறுவதும் இல்லை.*_
_*நரம்பற்ற நாக்கின் வரம்பற்ற பேச்சானது இரும்பான இதயத்தையும் சிதைத்து விடும் துரும்பாக.*_
_*பேசும் வார்த்தைகளில் கவனமாய் இருந்தால் செல்லும் பாதையில் இன்னல்கள் குறையும்.*_
_*இங்கு, சிலவற்றை
தேவைகள் தீர்மானிக்கின்றன.*_
_*பலவற்றை
தேவையில்லாதவர்கள் தீர்மானிக்கிறார்கள்.*_

No comments:

Post a Comment