Wednesday 21 February 2024

வாழிய பல்லாண்டு. இன்று அகவை 61 இல் தடம் பதிக்கும் அன்புச் சகோதரர், நல்லாசிரியர், வீரமாமுனிவர் இலக்கியப் பேரவை நிறுவனர், நமது கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்ற முன்னோடி, பணி நிறைவுக்குப் பிறகு திரைப்பட கலைஞராக வளர்ந்து வரும் அருமை இளவல், பன்முகத் திறன் கொண்ட ஜான் பெலிக்ஸ் கென்னடி இன்று நண்பகல் மனிதத்தேனீக்கு பொன்னாடை அணிவித்து மகிழ்ந்த தருணம். அருகில் தாம்பிராஸ் மாநிலத் துணைத் தலைவர், குருதிக் கொடையாளர், சமூக சேவகர் இல. அமுதன், மரியா பிரிண்டர்ஸ் & பைண்டர்ஸ் ஸ்டீபன் ராஜ் உள்ளனர். நாளெல்லாம் மகிழ்ந்து வாழ்ந்திட, அன்னைத் தமிழ் போல் இளமையாக வளமையாக வாழ்ந்திட வாழ்த்துகின்றேன். வாழிய பல்லாண்டு வாழியவே.




 

No comments:

Post a Comment