Monday 19 February 2024

சேலத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பண்பாட்டுத் திருவிழா.

 சேலத்தில் பிரம்மாண்டமாக

நடைபெற்ற
பண்பாட்டுத் திருவிழா.
நேற்று மாலை சேலம் தமிழ்ச் சங்க அரங்கில் நகரத்தார் சங்கத்தின் தலைவர் பணியாற்றிட களம் காணும் நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்தகாரர் வலையபட்டி
எம் ஏ கலையரசன்
தலைமையிலான ஸ்ரீ கற்பக விநாயகர் அணியின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரத்தார் சந்திப்பு அரங்கம் முழுவதும் நிரம்பி நடைபெற்றது.
களம் காணும் 41 பேரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
தலைவர் பணியாற்றிட களம் காணும் எம் ஏ. கலையரசன் வரவேற்புரை ஆற்றினார், இந்திரா கலையரசன் உடன்பிறந்த சகோதரர்கள் லேனா. காசிநாதன், லேனா நாராயணன், எஸ்பி அண்ணாமலை, சிடி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினர்.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
பொதுவாழ்வின் மேன்மை என்ற தலைப்பில் 58 நிமிடங்கள் சிறப்புரை ஆற்றினார்.
தூய எண்ணங்கள்
கொடுப்பதில் பேரின்பம்
பண்பட்ட மேலாண்மை
பாராட்டும் பண்பு
இவை நான்கும் இவர்கள் முகவரி.
தமிழ் மூதாட்டி ஒளவைப் பாட்டியின் வைர வரியான " குணமது கைவிடேல் "
உயர்ந்த குணத்தை எந்த நிலையிலும் கைவிடாதே என்ற கருத்தினை கவனத்தில் வைத்து இவர்கள் களம் காண்கின்றார்.
எது வசதியானதோ அதைச் செய்யாதீர்கள், எது சரியானதோ அதைச் செய்யுங்கள்.
மேன்மையாக
உண்மையாக உழைக்கும் போது திசைகள் தோறும்
வெற்றி உறுதி என்றார்.
விழாவினை கவிதா உடையப்பன், மீனாட்சி கலையரசன் தொகுத்து வழங்கினர்.
நகரத்தார் முன்னோடிகள்
சோனா வள்ளியப்பா, பிஎல் சுப்பிரமணியன், ராமகிருஷ்ணன் என்ற கண்ணன், ஆறுமுகம், செந்தில்நாதன், லேனா சுப்பிரமணியன், பழ. இராமசாமி, முத்துராமன், ஏஎன். பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான நகரத்தார் பெருமக்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
செயலாளர் பணியாற்றிட களம் காணும்
சி. ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.
பண்பாட்டுச் சிறப்பும்
அனைவரையும் மதிக்கும் பேராற்றல் மிக்க விழாவாக நடைபெற்றது.
நாணயமும் நா நயமும் என்றும்
போற்றிடுவோம்.
























































No comments:

Post a Comment