Friday 2 February 2024

எங்கள் திருமகன் சொ. ராம்குமார் பிறந்தநாள்.

எங்கள் திருமகன்
சொ. ராம்குமார் பிறந்தநாள்.
இன்று அகவை 26 இல் தடம் பதிக்கும் எங்கள் மகன் பொறியாளர்
சொ. ராம்குமார்
பிறந்தநாளை முன்னிட்டு திருநகர் மாநகராட்சி வார்டு எண் 94 அலுவலகத்தின் பின்புறம் உள்ள அருமை நண்பர் பொதுப் பணிச் செம்மல் ஸ்வீடு டிரஸ்ட் நிர்வாகி கோவிந்தராஜ் சிறப்பாக நடத்தி வரும் இல்லத்தில் காலை உணவு வழங்கி வழக்கம் போல எங்கள் வீட்டுப் பிறந்த நாளை எளிமையாக கொண்டாடுகின்றோம்.
இன்று காலை உணவை வழங்கி மகிழ்ந்த தருணம்.
கடந்த கால் நூற்றாண்டுகளாக எங்கள் வழக்கம் போல இன்று மூன்று வேளை சிறப்பு உணவு வழங்கி மகிழ்ந்த தருணம்.
வாழிய தலைமுறை வாழியவே.
கூடுதல் செய்தி
எங்கள் மகன் பொறியாளர் சொ. ராம்குமார் திருமணம்
வரும் 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை
தை 28 காரைக்குடியில்
அன்று மாலை வரவேற்பு
மற்றும் பெண் அழைப்பு எங்கள் பள்ளத்தூர் படைப்பு வீட்டில்.
தபாலில் அனுப்பிய அழைப்பிதழ் பலர் கிடைக்கவில்லை என்றார்கள்.
அன்பு கூர்ந்து இதனையே அழைப்பாக ஏற்று பங்கேற்றுச் சிறப்பிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம்
அலமேலு சொக்கலிங்கம்.















 

No comments:

Post a Comment