Thursday 30 June 2022

காலம் மாறும்.

 காலம் மாறும்.

எதிர்பார்க்கும் போது எதுவுமே நடக்காததும் எதிர்பார்க்காத போது பல அதிசயங்கள் நிகழ்வதுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.
எதிர்பார்த்த வாழ்க்கை யாருக்கும் அமைவது இல்லை. ஆனாலும் எதிர்பார்க்காமல் யாரும் வாழ்வது இல்லை.
உயர்ந்த இலட்சியங்களை அடைய பலமுறை தோல்வியடைவதில் தவறில்லை.
நேற்று ஜெயித்தவர் இன்றும் ஜெயிக்கலாம். ஆனால்.. நேற்று தோற்றவர் தினமும் தோற்பதில்லை.
காலம் மாறும்போது அதனோடு சேர்ந்து நாமும் மாறுவது தான் புத்திசாலித்தனம்.
நீங்கள் மற்றவர்களிடம் நம்பிக்கை வைத்திருந்தால், திறந்த மனதோடு பேசுங்கள். அதற்காக கொட்டித் தீர்த்து விடாதீர்.
இதயத்தை ஆயுதத்தால் வெல்ல முடியாது, மென்மையான அன்பால் தான் வெல்ல முடியும்.
நல்ல விஷயங்களை அமைதியாகச் செய்யுங்கள். வேண்டுமானால் மற்றவர்கள் அதை சப்தம் போட்டுப் பேசட்டும்.
நல்ல எண்ணமும் மகிழ்ச்சியும் இருந்தால் யானையை நூலால் கட்டிக் கொண்டு போவது போல எங்கும் போய் வரலாம்.
உங்களை நீங்கள் அறிய வேண்டுமானால் மற்றவர்களை கவனியுங்கள்.
மற்றவர்களை நீங்கள் அறிய வேண்டுமாயின், உங்களை நீங்கள் கவனியுங்கள்.
துன்பங்கள் என்பது மனித வாழ்வில் சில நேரங்களில் சந்திக்கக் கூடியது. இப்படி நேர்ந்து விட்டதே என்று துவண்டு போகாமல், அதைச் சமாளிக்கும் மனத் தைரியத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எந்த முடியாத செயலாக இருந்தாலும் அதற்கென ஒரு தீர்வு இல்லாமல் இல்லை.
நம் வாழ்வில் ஏதாகிலும் நெருக்கடி நிலையைச் சந்திக்கும் போது நிதானமாக யோசித்தால் கண்டிப்பாக அதற்குத் தீர்வு புலப்படும்.
என்னால் இது முடியாது, நான் இதிலிருந்து எப்படி மீள்வேனோ.? என்று அவநம்பிக்கையோடு நாம் இருந்தால் துன்பம் என்னும் சூழலில் சிக்கித் தவிப்பவர்களாய் நாம் ஆகி விடுவோம்.
ஆகவே எந்த நெருக்கடி வந்தாலும் பயப்படாது, தன்னம்பிக்கையோடு யோசித்து நாம் செயல்பட்டால் நம்மால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியும்.

No comments:

Post a Comment