Thursday 16 June 2022

கடந்துபோன காலங்கள்.

 கடந்துபோன காலங்கள்.

'ஒருவேளை சோறு தாயே' என்று சத்தம் போடும் பிச்சைக்காரனுக்கு சோறு போட மறுக்கிறார்கள்.
நண்பர் ஒருவர் மேடைகளிலே ஏழைகளைப் பற்றி மிக உருக்கமாக பேசுவார்.ஒரு பிச்சைக்காரனுக்கும் காலணா போட்டதில்லை.
எந்த கொடும் செயலிலும் துணிந்து இறங்குவார். ஆனால், அவரையும் பலர் நம்புகிறார்கள்.
சாகக் கிடக்கும் உயிருக்குக் கூட 'பணம்' கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் பண்ணும் டாக்டர்கள்...
ஜெயிக்க கூடிய வழக்கைக் கூட, பணம் கொடுக்காததால் தோற்கடிக்கும் வக்கீல்கள்...
நண்பனோடு பழகி, அவனது மனைவியை கெடுத்துவிடும் தலைவர்கள்..
ஒன்றா, இரண்டா?
லட்ச ரூபாயைத் திருட்டு த் தனமாக சம்பாதித்து இருபதாயிரம் ரூபாயை திருப்பதி உண்டியலில் போட்டு விடுவதால் வெங்கடாஜலபதி திருப்தி அடைவதில்லை.
மனிதாபிமானத்தை நேசிக்காதவர்கள், நான் முன்பகுதியில் கூறியபடி நரகவாசிகளே!
நான் பார்த்த வகையில் இரண்டு வகையான நீதிபதிகள் இந்தியாவில் இருக்கிறார்கள்.
ஒரு வகையினர் குற்றவாளிகளை கூட விடுதலை செய்து விடுகிறார்கள். இன்னொரு வகையினதர், நிரபராதி களை கூட தண்டித்து விடுகிறார்கள்.
வழக்கின் தன்மையை விட நீதிபதியின் மனப்போக்கே நியாய அநியாயங்களுக்கு காரணமாகிவிடுகிறது.
கூர்மையான கத்தியைக் கையில் வைத்துக் கொண்டு மென்மையான குழந்தையுடன் விளையாட்டு காட்டுகிறோம் என்பதை அவர்கள் மறந்து போய் விடுகிறார்கள்.
இன்றைய நீதிபதிகளில் பலர் உயர்ந்த தத்துவ பேச்சாளர்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் நியமிக்கப்பட்டிருக்கும் அனைவருமே எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், மனிதாபிமானிகள், அவர்களில் இளைஞர்களும் இருக்கிறார்கள்.
கள்ளம் கபடம் வஞ்சகம் நெஞ்சம் அவர்களிடம் இல்லை.
நானும் முந்தைய கண்ணதாசன் ஆக இல்லை. அதனால், எல்லோருடனும் சந்தோசமாக பழக முடிகிறது.
கடந்து போன காலங்களை எண்ணிப் பார்த்தால் இப்போது எனக்கு கண்ணீர் வரும்.
வஞ்சகர்களையே என் வாழ்நாள் முழுவதும் சந்தித்திருக்கிறேன்.
யாரோ ஒருவர் கவியரங்கத்தில் பாடியது போல் கவர்னர் அளவுக்குச் சம்பளம் வாங்கி ராஷ்டிரபதி அளவுக்கு செலவு செய்திருக்கிறேன்.
அன்றைய சந்திப்புகளை எண்ணிப் பார்க்கும் போது பொய், சூது, வஞ்சக நெஞ்சம் பற்றி இந்து மதம் சொன்னது என் நினைவுக்கு வருகிறது.
மனிதனை தெய்வமாக்க இந்துமதம் விரும்புகிறது.ஆனால், மனிதனை மனிதனாக்கும் முயற்சியிலேயே இன்னும் அது வெற்றி பெறவில்லை.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்துமதத்திலிருந்து...!
நன்றி கவியரசர் கண்ணதாசன் முகநூல்

No comments:

Post a Comment