Tuesday 21 June 2022

வெளிப்படையாக இருப்போம் .

 வெளிப்படையாக இருப்போம் .

எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள்.
முன் வரிசைக்கு வாருங்கள்.
யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும், தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம் போடுவதெல்லாம் வேண்டாம்.
நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள். நடையில் தெரியும் அந்தச் சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள் செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.
எந்தக் கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும் என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல் உங்களுடையதாகட்டும்.
எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள். அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது.
எப்போதும் எல்லோரிடம் நேர்மறை வார்த்தைகளைப் பேசுங்கள்.
எதிர்மறை விஷயங்கள் மீது கவனம் செலுத்தாதீர்கள்.
உங்கள் பலம் என்ன / பலவீனம் என்ன என்பதைப் பட்டியலிட்டு உங்கள் பலம் மீது மட்டும் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் பெயரை எப்போதும் யாரிடமும் தன்னம்பிக்கையாகக் கூறுங்கள்.
உங்கள் பிறப்பின் உன்னதத்தை ஆழமாக உணருங்கள்.

No comments:

Post a Comment