Friday 10 June 2022

உண்மையான பாராட்டு.

 உண்மையான பாராட்டு.

ஒருவரைப் பாராட்டுங்கள்.
மனதாரப் பாராட்டுங்கள். அவர்களிடம் இருக்கும் சின்னச் சின்ன நல்ல விசயங்களைக் கூட தேடிப்பிடித்துப் பாராட்டுங்கள்.
அதற்காக அந்தப் பாராட்டு அர்த்தமின்றி இல்லாமல் உண்மையாகவும், நன்மையாகவும் இருக்கும்படியாகப் பாராட்டுங்கள்.
நீங்கள் ஒருவரைக் கைகளைப் பிடித்து தூக்கி முன்னேற்றி விடக்கூட வேண்டாம், வெறும் ஒரு சில வார்த்தைகள் போதும் அதுவும் உங்கள் மனதார, உண்மையான, உத்வேகமான பாராட்டாக இருந்தால் போதும்.
நிச்சயமாக அவர்கள் முன்னேறுவார்கள். பலரது வாழ்க்கை இதனால் வளர்ச்சி பெறும். உங்கள் பாராட்டுக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும்.
இது பிறருக்கு மட்டுமல்ல, நீங்கள் பாராட்டுவதால் உங்களுக்கும் நன்மை தான். எப்படியென்றால் நீங்கள் மனதார, உணர்வோடு பாராட்டும் பொழுது அந்த உற்சாகமான, உத்வேகமான வார்த்தைகள் உங்கள் மனதுக்குள்ளும் பதியத் தொடங்குகிறது.
அது கொஞ்சம் கொஞ்சமாக பதியத் தொடங்கி உங்களை உத்வேகமாக, உற்சாகமாக, சாதனையாளராக தைரியமானவராக மற்றும் சிறப்பானவராக மாற்றும்.
இது நிச்சயம்!
இது சத்தியம்!
எனவே பாராட்டுங்கள்!
மனதாரப் பாராட்டுங்கள்!
நீங்களும் வளருங்கள்!
பிறரையும் வளர வழிவகை செய்யுங்கள்!
நீங்களும் முன்னேறுங்கள்!
பிறரையும் முன்னேற்றும் பாலமாக இருங்கள்.

No comments:

Post a Comment