Wednesday 15 June 2022

சிந்தித்தும் சிரித்தும் பேசுவோம்.

 சிந்தித்தும் சிரித்தும் பேசுவோம்.

காயங்களோடு சிரிப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படிச் சிரிக்கப் பழகிக்கொண்டால் எந்தக் காயமும் அவ்வளவு பெரிதல்ல.
பழகியதற்கான பலனை அடைந்தவுடன் சிலர் விலகுவதற்கான காரணங்களைத் தேடுகின்றனர்.
சொந்தக்காரன் சுண்ணாம்பு போல அளவா இருக்கனும். அளவுக்கு மீறினால் வாயும் வெந்துரும் வாழ்க்கையும் நொந்துரும்..!!
உங்கள் மனதில் இருக்கும் அச்சம் தான் உங்கள் முதல் எதிரி..!நீங்கள் தயங்கி நிற்கும் நொடிகள் தான் உங்கள் முதல் தோல்வி..!!
எதிரிகளின் அவமானங்களைக் காட்டிலும், நெருங்கியவர்களின் அன்புக்காகவே சுயமரியாதையை அதிகம் இழக்கிறோம்..!!
பிடித்த மனிதரோடு சிரித்துப் பேசுங்கள்..!பிடிக்காத மனிதரோடு சிந்தித்துப் பேசுங்கள்..!!
தெரியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமில்லை..!தெரிந்து செய்யும் தவறுக்கு மன்னிப்பு கேட்டு எந்தப் பயனுமில்லை..!!
எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பதை அறிந்தும் ஏனோ மனிதர்கள் எல்லாவற்றையும் அடைய ஆசைப்படுகின்றனர்.
பணத்தை தேடுவதற்குள் நிம்மதி தொலைந்து விடுகிறது. நிம்மதி தேடும்பொழுது வாழ்க்கை முடிந்து விடுகிறது.
கையில் இருக்கிற பணத்திற்கு நாம் ஒரு கணக்குப் போட்டு வைத்திருப்போம் ஆனால் காலம் ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கும்.
உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்காத நாட்கள் தான் நம் வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த நாட்கள் ஆகும்.
மகிழ்ச்சி என்பது உங்கள் வீட்டில் விளைவது, அதை மற்றவர் தோட்டத்தில் தேடாதீர்கள்.

No comments:

Post a Comment