Saturday 25 June 2022

கண்ணதாசன் எத்தனை கண்ணதாசன்

 *கண்ணதாசன் எத்தனை கண்ணதாசன்**

#வைணவ மாணவன்: நாராயண மன்றம் இதுவே நாளும் பேரின்பம்
(பக்த பிரகலாதா)
#சைவ பெரியார்: சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே
(திருவருட்செல்வர்)
#கிறுத்துவ அன்பர்: தேவனே என்னை பாருங்கள்
( ஞான ஒளி)
#இஸ்லாமிய சகோதரர்: எல்லோரும் கொண்டாடுவோம் அல்லாவின் பேரை சொல்லி
(பாவமன்னிப்பு)
#நாத்திகன்: இறைவன் உலகத்தை படைத்தானாம் ஏழ்மையை அவன்தான் படைத்தானா? ஏழையை படைத்தவன் அவன் என்றால் இறைவன் என்பவன் எதற்காக
(உனக்காக நான்)
#தேசபக்தன்: பாரதமே என்னருமை பாரதமே உன்னடிமை வீறு கொண்டு போரிடுவோம் அன்னையின் ஆணை
(ராஜபார்ட் ரங்கதுரை)
#பிரிவினைவாதி: ஹரியும் சிவனுமென பிரிந்து பிரிந்து நாம் வாழ்வோம் ஹரியானா எங்கள் தலைநகரம் சொந்த தலைநகரம் பஞ்சாப் பெறலாமா?
(ராமன் எத்தனை ராமனடி)
#தந்தை: கேளாய் மகனே கேளொரு வார்த்தை நாளைய உலகின் நாயகன் நீயே
(உத்தமன்)
#கணவன்: ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன வேரென நீயிருந்தால் அதில் நான் வீழ்ந்துவிடாமலிருப்பேன்
(வியட்நாம் வீடு)
#சகோதரன்: எதையும் தாங்குவேன் அன்புக்காக நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக இமைகள் வாழ்வதே கண்ணுக்காக என் இதயம் வாழ்வதே தங்கைக்காக
(தங்கைக்காக)
#மகன்: தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை
(தாயின் மடியில்)
#பாட்டாளி: வேர்வை துளிகளே பேசுங்கள் மண்ணில் விழுந்த கதைகளை கூறுங்கள்
(நியாயம் கேட்கிறோம்)
#விவசாயி: பட்டு வண்ண சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா பருவம் வந்த பெண்ணை போல நாணம் என்ன சொல்லம்மா
(பழநி)
#மாற்றுத்திறனாளி: அங்கம் குறைந்தவனை அழகில்லா ஆண்மகனை மங்கையர்கள் நினைப்பதுண்டோ சொல்லம்மா
(பாகபிரிவினை)
#ஆத்ம ஞானி: மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா மரணத்தின் தன்மை சொல்வேன் மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடியும் பிறந்திருக்கும்..மேனியை கொல்வாய் மேனியை கொல்வாய்..
( கர்ணன்)
#தத்துவ ஞானி: ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தையென்ன தேடிய செல்வமென்ன திரண்டதோர் சுற்றமென்ன...கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன....
(பாதகாணிக்கை)

No comments:

Post a Comment