Friday 24 June 2022

*கவியரசு பிறந்த* *நாள் வாழ்த்து*!!

 *கவியரசு பிறந்த*

*நாள் வாழ்த்து*!!
🌹🌹🎊🌹🎊🌹🌹
*சிறுகூடல்*
*பட்டியிலே*
*பிறந்த*
*முத்தையா*!!
*நீ*
*கன்னித்*
*தமிழ்க்கடலில்*
*கண்டெடுத்த*
*முத்தையா*!!
*காலைக்*
*குளித்தெழுந்து*
*கருஞ்சாந்து*
*பொட்டுமிட்டு*...
*கவிதையை*
*கவியுலகுக்குக்*
*கொடுத்தாய்*!!
*கலங்காதிரு*
*மனமே*!! என்ற
*கள்ளூறும்*
*பாடலைத்*
*திரையுலகிற்கு*
*வடித்தாய்* !!
*பெருங்கவி*
*ஆன பின்னும்*
*எடுப்பார் கைப்*
*பிள்ளையாய்ச்*
*சிரித்தாய்* !!
*வருங்காலம்*
*உனை நினைக்க*
*வரலாற்றில்*
*உன் பெயரைப்*
*பொறித்தாய்*!!
*தீட்டிய*
*கவிதையின்*
*தேன்சுவை*
*பருக*-
*தேனீக்களாய்*
*ரசிகக் கூட்டம்*
*சூழும்* !!-இசை
*கூட்டியே*
*நீ வடித்த*
*பல்லாயிரம்*
*பாடல்கள்*
*கோடான*
*கோடி*
*யுகங்கள்*
*வாழும்*!!
*ஏட்டிலே*
*நீ வடித்த*
*எண்ணற்ற*
*பாடல்கள்*
*இலக்கிய*
*வரிசையிலே*
*சேரும்*!!
*நாட்டிலே*
*தலைசிறந்த*
*கவியரசே*!!
*உனை*
*நினைத்தாலே*
*கற்பனைகள்*
*ஊறும்* !!
*கருத்தோடு*
*கவிதை*
*கணக்கின்றிப்*
*படைத்த*
*உனை* --
*காலத்தின்*
*கண்ணாடி*
*என்பேன்*!!
- *இலக்கிய*
*தரத்தோடு*
*பாடல்களை*
*தமிழுக்குத்*
*தந்த உனை*
*திரையுலக*
*முன்னோடி*
*என்பேன்*!!
*மனப்பாடப்*
*பாடல்களை*
*விடவும்- உன்*
*மணியான*
*பாடல்களை*
*மனப்பாடம்*
*செய்து*
*பள்ளியில்*
*படித்தேன்*!!
*மனத்தோடு*
*வாழும்*
*மானுடக்*
*கவிஞனே*!
*உனை*
*மனதார*
*வாழ்த்தி,-கவி*
*முடிப்பேன்*!!
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
✍🏻👏
*கு.மா.பா.கபிலன்*

No comments:

Post a Comment