Friday 16 April 2021

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இதைப் பின்பற்றுங்கள்.

 மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இதைப் பின்பற்றுங்கள்.

உங்களை நீங்களே மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உண்மையான நண்பர்களை மட்டும் உடன் வைத்திருங்கள்.
மனம் விட்டு,
வாய் விட்டு வெளிப்படையாக சிரியுங்கள்.
பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை ரசித்துச் செய்யுங்கள்.
குடும்பத்தாருக்கு முடிந்த உதவிகளைச் செய்யுங்கள். மனதில் நிம்மதி பிறக்கும்.
வதந்திகளையும், புரளிகளையும் பேசாதீர்கள், கேட்காதீர்கள்.
வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை அவ்வப்போது நினைத்துப் பாருங்கள்.
இதுவும் கடந்து போகும் என்ற மன நிலையோடு வாழுங்கள்.
அளவுக் கடந்த தன்னம்பிக்கையைக் கொண்டிருங்கள், தலைக்கனம் வேண்டாம்.
சிறு சிறு குறிக்கோள்களை உருவாக்கி அதை வென்று காட்டுங்கள்.
உங்கள் மனசாட்சிக்கு உண்மையானவராக இருங்கள்.
வீட்டுக்குள்ளேயே முடங்காமல் வெளிக்காற்று உங்கள் உடலைத் தொட அனுமதியுங்கள்.

No comments:

Post a Comment