Wednesday 21 April 2021

உண்மையான மகிழ்ச்சி.

உண்மையான மகிழ்ச்சி.
வாழ்க்கையில் நாம் என்ன சாதித்து இருக்கிறோம் என்பதற்கு நம் அக்கவுண்ட் பேலன்ஸ்/ நிலம் / வீடு வாசல்/ கார் போன்றவற்றைத்தான் அளவு கோளாக எடுத்து இருக்கின்றோம், யாராவது நாம் செய்துள்ள நற்காரியங்கள், உறவுகள், நண்பர்கள், பொதுநலப் பணிகள் போன்றவற்றை அளந்து இருப்போமென்றால் அதில் நாம் பெறும் மதிப்பெண் மிகக் குறைவுதான்.
நாம் எது அதிக மகிழ்ச்சி என்பதில் தெளிவாக இருந்தால் நமக்குப் பணத்தின் மீதிருக்கிற பற்று குறையும், பொருள் தேடல் என்ற கடலில் நம்மையும் தொலைத்துவிட்டு, வாழ்க்கையும் தொலைத்து விடுகிறோம்.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் மன ஆரோக்கியம் முக்கியம் ,அந்த மன ஆரோக்கியத்திற்கு மருந்து மகிழ்ச்சி தரும் மற்ற விசயங்கள்தான் பணமல்ல….
பணம் என்ற உப்புத் தண்ணிரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் எடுத்துக் கொண்டேதான் இருக்கும். தாகம் தீரும் வரை காத்திராமல் மற்ற மகிழ்ச்சி தரும் விசயங்களில் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்வைத் தொடரப் பழக வேண்டும்.

அதற்காகத் தேடலை நிறுத்திவிட்டு ஊரில் வெட்டியாக சுற்றவேண்டும் என்பதில்லை..எதற்கும் ஒரு எல்லையை வரையறை செய்து கொள்ளவேண்டும்,உண்மையான மகிழ்ச்சி எதில் உள்ளது என்பதை கண்டறிய வேண்டும்..அதுவே நம் இலக்காக இருக்கவேண்டும். 

No comments:

Post a Comment