Monday 26 April 2021

திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும்,திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

 திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும்,திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு நேற்று தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்படக்கூடிய கட்டிடத்தில் மேல் தளங்களில் ராணுவப்படை வீரர்கள் தற்போது தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். அவர்களில் பலர் லேப்டாப்புகள் பயன்படுத்துவதால் அவர்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட அலுவலர் விஸ்வநாதன். வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது. வேண்டுமென்றால் எங்களிடத்தில் டெமோ வாக்கு இயந்திரம் இருக்கிறது உங்களுடைய ஹேக்கர்ஸ் இருந்தால் கொண்டு வந்து செயல்படுத்திக் காட்டுங்கள்,அப்படி யாராவது நீங்கள் நிரூப்பித்தால் வாக்கு இயந்திர முறை தேர்தலையே இனி இந்தியாவில் செயல்படுத்த மாட்டோம் என்று கே.என்.நேருவிடம் சவால் விடுத்துள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.என்.நேரு, ''லேப்டாப் பயன்படுத்தக்கூடிய இராணுவத்தினரையும் காவல்துறையும் நாங்கள் வேறு இடத்திற்கு மாற்ற வலியுறுத்தி வந்தோம் சரி செய்வதாகச் சொல்லி இருக்கிறார்கள்.
அடிக்கடி சந்தேகப்படும்படியான சம்பவங்கள் நடக்கின்றன. ட்ரோன் ஒன்று பறந்தது. அவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக கூறுகிறார்கள்.
அதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும். அந்த கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். வேறு வழியில்லை'' என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
குறிப்பு;
திமுக,வில்( ஐடி விங்)தகவல் தொழில்நுட்ப அணி என்றே ஒன்று இயங்குகிறது.அதில் ஒருவருக்கு கூட அந்த சவாலை ஏற்கும் தகுதியில்லையா..?
இந்த அணியின் மாநில செயலாளர் டாக்டர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் MLA அவர்கள் வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பை திருச்சிராப்பள்ளியில் முன்பு மண்டலப் பொறியியல் கல்லூரி என அழைக்கப்பட்ட தேசிய தொழில் நுட்பக் கழகத்தில் முடித்து, பின்னர் தன் முதுநிலைப் பட்டப்படிப்பை செய்பணி ஆய்வில் முடித்து, பின்னர் முனைவர் பட்டத்தை நியூயார்க்கு மாநில பல்கலைக்கழகத்தில் மனித காரணிகள் பொறியியல் / பொறியியல் உளவியலில், மேற்கொண்டவர்.இவர் இந்த தேர்தல் அதிகாரியின் சவாலை ஏற்கலாமே..?
சரி..அதற்கான திறமை இவர்களுக்கு இல்லை என்றாலும்,சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற, அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர்க்கு 450 கோடி கொடுத்து பிடித்தது போல்,தேர்தல் அதிகாரியின் இந்த சவாலை ஏற்க உலகில் யாரை வேண்டுமானாலும் பிடித்து கொண்டு வந்து இவர்கள் நிரூபிக்கலாமே..?
ஏன் செய்யவில்லை..?
இந்த தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் மின்ணணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) முறைகேடுதான் காரணம் என சொல்லி தப்பிக்க இது ஒரு முன் ஜாக்கிரதையாக இருக்குமோ..?


No comments:

Post a Comment