Thursday 22 April 2021

நமது தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் துரோகிகள்..

 நமது தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் துரோகிகள்..

கேரள மாநிலம் கொச்சி போலீஸாருக்கு கள்ள நோட்டு தொடர்பாக ஓர் ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, இரண்டு மாநில போலீஸாரும் கடந்த சில வாரங்களாக தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட ஒரு நபர் கோவையில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில், கேரள போலீஸ் தனிப்படையினர் செவ்வாய்கிழமை கோவை வந்தனர்.
இதையடுத்து, கரும்புக்கடை வள்ளல் நகர் பகுதியில் உள்ள அஸ்ரஃப் அலி (24) என்பவனை மடக்கிப்பிடித்தனர். அஸ்ரஃப் கொடுத்த தகவலின் அடிப்படையில் உக்கடம் அல்-அமீன் காலனி பகுதியில் உள்ள சையது சுல்தான் (32) என்பவன் வீட்டில் கேரளா மற்றும் கோவை போலீஸார் இணைந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.
அந்த, சோதனையில் ரூ 1.8 கோடி மதிப்புள்ள, 2,000 ரூபாய் கள்ள நோட்டுகள் கத்தை கத்தையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது? யார் யாருக்கு புழக்கத்தில் விடப்பட்டது? இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்?
........................
தூத்துக்குடி வழியாக கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ.610 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் மெத்தாம்பெட்டமைன், சாரஸ், ஹஷீஷ் உள்ளிட்ட போதை பொருட்களுடன் துப்பாக்கிகளும் சிக்கியுள்ளன.
இந்நிலையில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு கப்பலில் வந்த கன்டெய்னர்களை தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது பனாமா துறைமுகமான பல்போவாவில் இருந்து செங்கோட்டையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு மரக்கட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன. அந்த மரக்கட்டைகள் கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு பெல்ஜியம் துறைமுகமான அன்ட்வெர்ப், இலங்கை துறைமுகம் கொழும்பு ஆகியவற்றின் வழியாக தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
நேற்று மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்று சந்தேகப்படும்படியான 8 கன்டெய்னர்களை இறக்கி சோதனை செய்தனர். அவற்றில் 6 கன்டெய்னர்களில் மரக்கட்டைகளுக்கு மத்தியில் 9 பெரிய பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததும், அதில் பல்வேறு அடுக்குகளாக பார்சல் செய்யப்பட்ட, கொடிய போதை பொருளான கொக்கைன் இருந்ததும் தெரியவந்தது.
இவற்றை கையாள வசதியாக செங்கல் வடிவில் மாற்றி வைத்துள்ளனர். மொத்தம் 303 கிலோ எடையிலான கொக்கைனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2000 கோடி.
ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அவை பனாமா மற்றும் டெக்சாஸ் பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்றும், தூத்துக்குடியில் உள்ள ஒரு பிரபல ஷிப்பிங் நிறுவனம் ஏஜென்டாக செயல்பட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு மரக்கட்டைகளை இறக்குமதி செய்து கொடுத்ததும் தெரியவந்தது.
சர்வதேச போதை பொருள் கடத்தல் மாபியாவுடன் தொடர்பில் உள்ள தூத்துக்குடி நபர் ஒருவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பு;தூத்துக்குடியில் உள்ள ஒரு பிரபல ஷிப்பிங் நிறுவனம் ஏஜென்டாக செயல்பட்டு தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு மரக்கட்டைகளை இறக்குமதி செய்து கொடுத்ததும், சர்வதேச போதை பொருள் கடத்தல் மாபியாவுடன் தொடர்பில் உள்ள தூத்துக்குடி நபர் ஒருவர் குறித்தும் விசாரித்து வருகின்றனர் என மட்டுமே நமது செய்தி ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.ஆனால் அவர் பெயரை பதிவு செய்யவில்லை.
காரணம்..?அவர் நிச்சயமாக இந்துவா இருக்கமாட்டார்.இந்துவாக இருந்திருந்தால் நமது ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டிவிடும்.அதிலும் காவிவேட்டி கட்டியவர்களாக இருந்திருந்தால் ஒரே பிரேக்கிங் நியூஸாக போட்டு,தொலைக்காட்சி விவாதங்களும் செய்து தனது ஊடக தருமத்தை நிலைநாட்டி இருக்கும் வெட்கம் கெட்ட நமது ஊடகங்கள்..
மேலே குறிப்பிட்டவர்கள் நமது தேசத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் துரோகிகள் என்றால்,அதை மூடி மறைக்கும் நமது ஊடகங்களும் அதற்கு துணை போகும் அனைவரும் தேச துரோகிகளே..
இந்த தேச துரோகிகளைப் பற்றிய செய்தியை படித்த இன்று, இன்னொறு செய்தியையும் படிக்க நேரிட்டது.
அதாவது,நெல்லை மாவட்டத்தில்,
பாப்பாக்குடி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தெருவைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற சிறுமி, சேரன்மகாதேவி பகுதியில் சேகரித்த பழைய பொருள்களை முக்கூடலில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் விற்ப்பதற்காக தனது குடிசையில் கொட்டி தரம் பிரித்துக் கொண்டிருந்தார். அந்தக் கழிவுகளோடு ஒரு பர்சும் இருந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்த போது, ரூபாய் நோட்டுகள் இருந்ததைக் கண்டு அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
அதை பரிசோதித்த போலீசார், 58 ஆயிரத்து 210 ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போனுடன் ஆதார் அட்டையும் இருந்ததால், உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைத்துள்ளனர்.
முக்கூடல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் காவுராஜன் குப்பை சேகரித்து அதில் வயிறு வளர்க்கும் மாரியம்மாளின் நேர்மையைப் பாராட்டி, குத்துவிளக்கு ஒன்றை பரிசளித்துள்ளார்.
சேகரிப்பது குப்பையாக இருந்தாலும் இவள் ஒரு குத்துவிளக்கு என்பதால், குத்துவிளக்கை பரிசளித்திருப்பார்களோ..?



No comments:

Post a Comment