Monday 12 April 2021

உறுதியும் முயற்சியும்.....

 உறுதியும் முயற்சியும்.....

காற்றடிக்கும் நேரத்தில் மாவு விற்கவும் கூடாது, ஊசி தேவைப்படும் இடத்தில் நூல் விற்கவும் கூடாது. காலம், தேவை இரண்டையும் கவனத்தில் கொண்டால் வெற்றி என்பது உங்கள் கைகளில் தவழும்.
நாம் செய்யும் தவறுக்கு அனுபவம் என்று பெயரிடுகிறோம் என்பார்கள். அனுபவம்தான் நம்மைப் பக்குவப்படுத்தும். அவைதான் வாழ்வின் பொக்கிஷங்கள். அவ்வப்போது ஏற்படும் வெற்றி தோல்வி களை அசைபோட்டு அனுபவப் பாடங்களில் தேர்வு பெற்று வெற்றிப் பயணத்தில் பீடு நடைபோடுங்கள்.
பயத்தை கைவிடுவதே வெற்றிப் பாதைக்கு பலம் சேர்க்கும். தோல்வியைக் கண்டு பயம் கொள்ளக்கூடாது. தடங்கல்களைக் கண்டு தயங்கி நிற்கக் கூடாது. ஒரு மேட்டை கடக்க வேண்டுமென்றால் இரண்டு பள்ளங்களை கடந்தே ஆக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வெற்றியின் அடிப்படையே பேச்சுக்கலைதான். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்களே. வாழ்க்கையின் தாரக மந்திரம் அதுதான். வியாபாரத்திலும் அதுதான் பெரும் சக்தி. உற்சாகமாகப் பேசினால் உலகத்தையே வளைத்துப் போட முடியும். பேச்சுடன் முகத்தில் புன்னகையும் ஏந்தியவர்களுக்கு வெற்றிமேல் வெற்றிதான்.
சாதனைக்கு எல்லை கிடையாது. சோதனை இல்லாமல் வெற்றியும் கிடையாது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் முயற்சியை இடையில் விடக்கூடாது. `கிடைத்ததுபோதும்’ என்று சலிப்பு கொள்ளவும் கூடாது. *எடுத்த காரியத்தில் உறுதியும் இருக்க வேண்டும். அதை வென்றும் முடிக்க வேண்டும்.

No comments:

Post a Comment