Monday 19 April 2021

மனிதர்களின் வெற்றி

 மனிதர்களின் வெற்றி

வெளிக் காரணிகளை விட
உள்ளுணர்வின் ஆற்றலே.
மனிதருக்கு மகத்தான ஊற்று
உள்மன எண்ணங்களே.
எல்லா எண்ணங்களும்
மனிதர்களுக்கு வெற்றியை
ஈட்டித் தருவதில்லை.
எண்ணங்கள் மனிதர்களை
இயக்கும் சக்தி படைத்தது.
அதற்கேற்றவாறு அவரவர் வாழ்க்கைநிலை மாறுவதும் இயற்கையின் உண்மையே.
எண்ணங்கள் மனிதர்களுக்கு செயல்வடிவமாக்கும் சக்தி.
ஒட்டுமொத்த வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணி.
நல்எண்ணத்தின் ஆளுமை
வெற்றியில் அடங்கியுள்ளது.
எண்ணத்தை ஆளும் திறன் படைத்தவர்கள் மகிழ்வான
வாழ்க்கை அமைந்து விடுகிறது.
தேவையான இலக்குகளை அடைய, விரும்பிய வாழ்க்கை பெறவும்
எண்ணங்களின் அபார ஆற்றலலே.
ஆரோக்கியமான பலன் பெறவும்
சுற்றுப்புற நலன் காப்பதும்
எண்ணங்கள் ஆளும் ஆற்றலலே.
எண்ணங்கள் மனிதர்களை
உருவாக்கும்
மனிதர்களும் எண்ணங்களை உருவாக்கலாம்
எண்ணங்களின் புரிதலாலும், எண்ணங்களின் வாழ்க்கை மாற்றமும்
எண்ணத்தை நெறிபடுத்தக் கூடிய
மன பக்குவத்தினால் சாத்தியமே.
எண்ணத்தை ஆளும் திறன்
உலகத்திற்கு தேவைப்படும் வாழ்க்கைதிறன் ஆகும்.

No comments:

Post a Comment