Monday 12 April 2021

கவியரசு புலனம்*

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
11.04.2021.
ஞாயிற்றுக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
*இன்றைய நாளில்..*
♨️இன்று மகாத்மா காந்தியின்
மனைவி கஸ்தூரிபாய் காந்தி பிறந்த நாள்-1869.
♨️இன்று நடுக்குவாதம் அல்லது
பார்கின்சன் நோய் Parkinson's disease தினம்.
இது உடலின் மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய். பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது.
மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது.
〰️〰️〰️🧠👋🏿👐🏾〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று.*
🎼
மயக்கம் எனது தாயகம்
மௌனம் எனது தாய்மொழி
கலக்கம் எனது காவியம் - நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்
பகலில் தோன்றும் நிலவு கண் பார்வைக்கு மறந்த அழகு
திரை மூடிய சிலை நான் துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான்
நானே எனக்கு பகையானேன் என் நாடகத்தில் நான் திரையானேன்
தேனே உனக்கு புரியாது அந்த தெய்வம் வராமல் விளங்காது
விதியும் மதியும் வேறம்மா அதன் விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா என் வழி மறைத்தாள் விதியம்மா
படம்: குங்குமம்
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்பு:
கே. மோகன்
ராஜமணி பிக்சர்ஸ்
இசை: கே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
விஜயகுமாரி
சாரதா
எஸ். எஸ். ராஜேந்திரன்
வெளியீடு: 02.08.1963
நீளம்: 4304 மீட்டர்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
📢 *அரசியல் சூழலும் கவியரசர் பாடலும்*
🎙️கடந்த சட்ட மன்ற தேர்தலில் சின்ன சின்ன கட்சிகள் தனது தகுதிக்கு மீறிய அளவில் சீட்டுகளை கூட்டணி கட்சியிடம் வாங்கி விட்டு திருப்பியும் கொடுத்துள்ளார்கள்.
பிரச்சாரத்தில் கடைசி நேரத்தில், தான் மட்டும் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலையில் தன் கட்சி வேட்பாளர்களுக்கு கூட பிரச்சாரத்திற்கு போகாமல், தன் தொகுதியில் மட்டும் பிரச்சாரம் செய்துள்ள அவலமும் அரங்கேறி உள்ளது. இப்படி மாற்றியது யாரோ..?
*கவியரசர் பாடல்.*
மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ..
காரிகையின் உள்ளம் காண வருவாரோ..
நேற்று பார்த்த விழி
கேட்ட மொழி யாவும்
காற்றிலாடி வரும் ஆற்று வெள்ளமென‌
மாற்றி மாற்றி அலை மோதும்..
படம்: பணமா பாசமா
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment