Thursday 11 November 2021

ஒரு சாதாரண மனிதனின் சுயசரிதம் இந்த அளவுக்குப் பரபரப்பாக விற்பனை ஆகும் என்று, நான் ஒரு போதும் கருதியதில்லை...!

 ஒரு சாதாரண மனிதனின் சுயசரிதம் இந்த அளவுக்குப் பரபரப்பாக விற்பனை ஆகும் என்று, நான் ஒரு போதும் கருதியதில்லை...!

1962 ல் நான்கு ருபாய் விலையில் இதைப் பதிப்பித்தார்கள். அப்படி இருந்தும் நன்கு விற்பனை ஆயிற்று.
காந்தி அடிகளின் சுயசரிதையை படித்தபின், இதனை எழுதியதால் உண்மையை நிர்வாணமாகக் கூறுவதில் அதிக ஆசை எழுந்தது.
உலகம் என்ன குளிக்கும் அறையா, இஷ்டம் போல ஆடையின்றி குளிக்க? ஆற்றில் குளிக்கும் போது ஒரு கோவணமாவது கட்டிக் கொள்ளத்தானே வேண்டும். அவமானத்துக்கு பயந்து வெட்கப்பட்டு, சில உண்மைகளை மறைத்தே தீர வேண்டியதாகி விட்டது.
மீசை முளைக்காத பருவத்தில், பிறந்த கிராமத்தை விட்டு பறந்து, காற்றிலே அலைமோதி, கடைசியில் தனித்து விழுந்து விட்ட காகிதம் ஒன்று அந்த நாள் நியாபகத்தை அச்சிலேற்றி விட்டது.
"எப்படி வாழ வேண்டும்? என்பதற்கு இது நூலல்ல," எப்படி வாழக்கூடாது "என்பதற்கு இதுவே வழிகாட்டி.
இப்படி ஒரு முன்னுரை எழுதி இருக்கிறார் கவியரசர் கண்ணதாசன் அவர்கள்.. அவருடைய" வனவாசம் " புத்தகத்திற்கு...!
நன்றி கவியரசு கண்ணதாசன் குழு



No comments:

Post a Comment