Saturday 13 November 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள் 13.11.2021 சனிக்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
13.11.2021 சனிக்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில் அன்று..*
🌞1947ல் இன்று சோவியத் ஒன்றியம் ஏகே-47 துப்பாக்கியை வடிவமைத்தனர். இதுவே உலகின் முதலாவது தாக்குதல் துப்பாக்கி
ஆகும்.
🌞இன்று தமிழக நாடகக் கலைஞர், நாடகாசிரியர் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம-1922.
🌞இன்று திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலா பிறந்த தினம்-1935.
🌞இன்று உலக கருணை தினம்
பொருளாதாரம் மற்றும் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுபவர்கள் மூலமாக நாம் கடவுளை காணலாம். அதற்கு கருணை கொண்ட மனம் தேவை.
இந்த மனம் அனைவருக்கும் கட்டாயம் வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் ஆண்டுதோறும் நவம்பர் 13ம் தேதியை உலக கருணை தினமாக கொண்டாடி வருகிறோம்.
〰️〰️〰️💞🕯️🍚〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶 கருணை மழையே மேரி மாதா கண்கள் திறவாயோ
கண்கள் கலங்கும் ஏழை மகனின் கால்கள் தருவாயோ
கன்னிமாதா தேவ சபையின் கதவு திறவாதோ
கனிந்து உருகும் மெழுகு விளக்கின் ஒளியும் வளராதோ
கருணை மழையே மேரிமாதா..
தொட்ட இடங்கள் கோடி காலம் வாழும் உன்னாலே
சோர்ந்த மகனை எடுத்து வைத்தேன் உந்தன் முன்னாலே
ஆடும் அலைகள் உன்னாலே
அசையும் மரங்கள் உன்னாலே
உலகம் நடக்கும் உன்னாலே
உதவி புரிவாய் கண்ணாலே
கருணை மழையே மேரிமாதா..
*படம்: அன்னை வேளாங்கண்ணி*
இயக்கம்: கே.தங்கப்பன்
தயாரிப்பு: கே.தங்கப்பன்
இசை: ஜி.தேவராஜன்
நடிப்பு: ஜெயலலிதா,
ஜெமினி கணேசன்,
பத்மினி
ஒளிப்பதிவு:
ஜி.கே. ராமு
படத்தொகுப்பு:என். எம். சங்கர்
விநியோகம்: கிரி மூவீஸ்
வெளியீடு: 15.08.1971
நீளம்: 3687 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment