Tuesday 16 November 2021

பாராட்டும் கலை.

 பாராட்டும் கலை.

தினமுமே யாரையாவதுப் பாராட்டித் தான் பாருங்களேன் உங்கள் வாழ்வில் எல்லா நாளும் இனிய நாளாகும்.
நீங்கள் எப்போதாவது உங்கள் மனைவியை/கணவனை
பாராட்டியது உண்டா.
அதிலும் குறிப்பாக உங்கள் குழ்ந்தைகளைப் பாராட்டிப் பாருங்களேன்
அவர்களது வளர்ச்சியைப் பாருங்களேன்,நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும்.
அலுவலகத்தில் உயர் அலுவலரை முகத்துதி செய்யும் நாம் வீட்டில்
ஏன் மனைவியை / கணவனை / குழந்தைகளைப் பாராட்டுவதில்லை?
வீட்டின் அதிகாரம், உரிமை நம்மிடம் இருப்பதாலா?
நமக்குத்தான் மற்றவர்கள் சந்தோஷப்படுவதைப் பார்க்க பிடிக்காதே?
நம் மனுசுக்குத் தான் பொதுவாக யாரையும் பாராட்ட பிடிக்காதே (Ego-ego).
அப்படி இருக்க
ஆனால் யாராவது நம்மைப் பாராட்ட மாட்டார்களா என்று மட்டும் நம் மனசு ஏங்குவது ஏனோ?
நாம் பாராட்டும் போது எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்பதை பாராட்டிப் பார்த்துத்தான் உணருங்களேன்(உங்கள் EGOவை மறந்து).
நாம் பாராட்டுவது நம்மை யாராவது பாராட்டத்தான் என்ற நிலை தாண்டி பலரையும் தட்டி எழுப்பும் என்பதே பேருண்மை.
மிகவும் சிக்கலானவற்றை எளிமை என நினைக்காதீர்கள் எளிமையானவற்றை சிக்கலெனக் கருதாதீர்கள்.
இதுவே வாழ்வின் மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணம்.

No comments:

Post a Comment