Monday 8 November 2021

இருப்பதை எண்ணி மகிழ்வோம்.

 இருப்பதை எண்ணி மகிழ்வோம்.

மனிதவாழ்வின் நோக்கமும் அர்த்தமும் சந்தோஷமே.
சந்தோஷம் எதில்இருக்கிறது, எங்கே இருக்கிறது ?
ஒருகாலத்தில் சந்தோசம் மற்றொரு காலத்தில், நேரத்தில் துக்கமாகத் தெரிகிறது.
சந்தோஷமும் துக்கமும் நம் மனதில் தான் இருக்கிறது
சந்தோசம் என்பது ஆரோக்கியம் அறிவு ஆற்றல் வீடு பொருள் அதிகாரம் அந்தஸ்த்து பணம் பதவி இவற்றில் இருப்பதாகக் கருதினாலும்,
சில நேரங்களில் சந்தோசம் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருப்பதுதான் என்று எண்ணுகிறோம்.
நோய்வாய்பட்டு உடல் நலம் திரும்பப்பெறும் போது போது ஆரோக்கியம் சந்தாஷமாக தெரிகிறது.
உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது வேறு எதிலோ சந்தோசம் இருப்பதாகத் தேடி அலைக்கிறோம்.
எதிலும் எல்லாவற்றிலும் சந்தோசம் அடைய திருப்தியான மனநிலை தான் தேவைப்படுகிறது.
ஓய்வு பெற்றவர்களைக் கேளுங்கள் அல்லது வேலை தேடுபவர்களைக் கேளுங்கள் வேலை எவ்வளவு சந்தோஷம் தரும் என்று சொல்லுவார்கள்.
வேலையில் இருப்பவர்களைக் கேளுங்கள் வேலை துக்கத்தை தருவதாகவே சொல்லுவார்கள்.
அவ்வப்போது கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவிக்காமல்
தன்னிடம் இல்லாத பொருளுக்காக வருத்தமடைவதே மனிதப் பண்பாக மாறிவிட்டது.
தன்னிடம் இருப்பதை எண்ணி சந்தோசம் அடைபவனே சந்தோஷமான மனிதன்.
ஒன்றைப் பெறுவதிலோ வைத்திருப்பதிலோ சந்தோசம் கிடைப்பதில்லை, உண்மையில் மற்றவர்களுக்குதெ தருவதில்தான் சந்தோசம் இருக்கிறது என்பது மற்றவருக்குக் கொடுக்கும் போதுதான் தெரிகிறது. நீங்கள் உங்களையே சந்தோஷப்படுத்திக் கொள்ளும் வழி அது.
எனவே சின்னச்சின்ன விஷயங்களில் எங்கே எப்போது கிடைத்தாலும் கிடைக்கும் சந்தோஷத்தை அனுபவியுங்கள். ஆராயாதீர்கள், சந்தோஷத்தை தள்ளிப்போடாதீர்கள். அப்புறம் சந்தோசம் என்ற ஓன்று உங்கள் வாழ்வில் வராமலேயே போயிவிடக்கூடும்.
நீங்கள் எண்ணுவதைவிட காலம் குறைவாகவே உள்ளது
நீங்கள் சந்தோஷமாக இல்லாமல் இருக்க ஏதோ ஒரு காரணத்தைத் தேடி அலையாதீர்கள்.
சந்தோசம் திருப்தியான மன நிலையில்தான் உள்ளது என்பதை உணருங்கள், எனவே என்றும் எப்போதும் சந்தோஷமா இருக்க முயற்சியுங்கள்.

No comments:

Post a Comment