Monday 15 November 2021

வாழ்க்கைத் தத்துவம்.

 வாழ்க்கைத் தத்துவம்.

ஒரு யோகிடம் அவரது சீடர்கள் வாழ்க்கைத் தத்துவம் பற்றி அறிந்து கொள்ள நினைத்தார்கள் எவ்வளவு கேட்டும் அவர் அது பற்றி ஒன்றும் பேசவில்லை. ஆனால் சாகும் தருவாயில் இருந்த பொது யோகி , தன்னோட சீடர்களுக்கு அவர்கள் கேட்ட வாழ்க்கைத் தத்துவத்தை புரியவைக்க நினைத்தார்.
எல்லா சீடர்களையும் அழைத்து உட்கார வைத்து, அவர்களுக்கு தன்னோட பொக்கை வாயைத் திறந்து காண்பித்து , ‘வாழ்க்கைத் தத்துவம் இதுதான்’னு சொல்லி அனுப்பிவிட்டார் .
சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை, ஒரே ஒரு சீடன் மட்டும் வாய்க்குள் அப்படியென்ன வாழ்க்கைத் தத்துவம் இருந்துதிடப் போகுதுன்னு குழம்பியவன், மெதுவாக குருவிடமே உங்கள் வாயைத் திறந்து காண்பித்து ஆனுப்பிவிட்டீகள், அதற்கு என்ன பொருள் என்று கேட்டான்.
அதற்கு குரு சீடனைப் பார்த்துக் கேட்டார்.. ‘என் வாய்குள்ள என்ன இருந்தது?’
‘நாக்கும் உள்நாக்கும் இருந்தது!’
‘பல் இருந்ததா?’
‘இல்லை.’
அதுதான் வாழ்க்கை.. வன்மையானது அழியும், மென்மையானது வாழும்.
பெரும் புயலில் கடினமான மரம் மாய்கிறது . ஆனால் மெல்லிய நாணலோ வளைந்துகொடுத்து மீள்கிறது.
கடுமையானது துன்பத்தையும் மென்மையானது மகிழ்வையும் தரும் .
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது.
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்தமனம் வீழ்வதில்லை.

No comments:

Post a Comment