Tuesday 23 November 2021

கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._ 〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ 23.11.2021 செவ்வாய்க்கிழமை

 கவியரசு புலனம்*

〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
_கண்ணதாசன் புகழ் பரப்பும் பணியில் 14ஆண்டுகள்._
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
23.11.2021 செவ்வாய்க்கிழமை
〰️〰️〰️〰️〰️〰〰️〰️〰️
*இன்றைய நாளில்..*
🌞இன்று தமிழகக் கவிஞர், எழுத்தாளர் சுரதா பிறந்த தினம்-1921.
🌞இன்று தென்னிந்தியத் துறவி, இந்து மெய்யியலாளர் சத்திய சாயி பாபா பிறந்த தினம்-1926.
🌞இன்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் படக்கம்பனி உரிமையாளர்
ஏ.எல். சீனிவாசன்
பிறந்த தினம்-1923.
ஏ. எல். சீனிவாசன்
தமிழ்த் திரைப்படத்
தயாரிப்பாளர் ஆவார். இவர் பல இயக்குநர்களை தமிழ்த் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார்.
கவிஞர் கண்ணதாசனின்
மூத்த சகோதரரான இவர்
ஏ.எல்.எஸ். பட தயாரிப்பகம்
என்ற பெயரில் திரைப்படங்களைத் தயாரித்து வந்தார்.
ஏ.எல்.எஸ்.
எனவும் அழைக்கப்படுகிறார்.
தயாரித்த திரைப்படங்கள்:
*ஆனந்தி
*சினிமா பைத்தியம்
*நியாயம் கேட்கிறோம்
*பணம்
*சாந்தி
*அம்பிகாபதி
*திருடாதே
*சாரதா
*மணி ஓசை
உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ளார்
〰️〰️〰️🎙️🎼👏〰️〰️〰️
*கவியரசர் எழுதிய பாடல் ஒன்று*
🎶
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனூறும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
நெல்லிலே மணியிருக்கும் நெய்யிலே மணமிருக்கும்
பெண்ணாகப் பிறந்து விட்டால் சொல்லாத நினைவிருக்கும்
சொல்லாத நினைவிருக்கும்
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
பிள்ளையோ உன் மனது இல்லையோ ஒர் நினைவு?
முன்னாலே முகமிருந்தும் கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணாடி கேட்பதென்ன?
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்
சொந்தமோ புரியவில்லை சொல்லவோ மொழியுமில்லை
எல்லாமும் நீயறிந்தால் இந்நேரம் கேள்வியில்லை
இந்நேரம் கேள்வியில்லை
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்...
*படம்: ஆனந்தி*
இயக்கம்:
பி.நீலகண்டன்
தயாரிப்பு: ஏ.எல். சீனிவாசன்
இசை: விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்பு: எஸ்.எஸ். ராஜேந்திரன்,
விஜயகுமாரி
விநியோகம்: ஏ.எல். எஸ். தயாரிப்பகம்
வெளியீடு: 25.12.1965
நீளம்: 4179 மீட்டர்
〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️
🙏🏻
கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment