Tuesday 23 November 2021

நமக்குள் இருக்கும் நம்பிக்கை.

 நமக்குள் இருக்கும் நம்பிக்கை.

ஒருமுறை எனது நண்பர் ஒருவர் தனது அறையில் தூங்கபோனார் அப்போது மின்வெட்டு காலம் அன்று வீட்டில் மின்சாரம் இல்லை.
அது ஒரு கோடை காலம் ஒரே புழுக்கமுங்க. நண்பருக்கு தூக்கம் போச்சுங்க என்ன செய்யறதுன்னு அவருக்குத் தெரியலையுங்க. கடைசியா அறை சன்னலையாவது திறந்துவைக்கலாம் அப்போதாவது காற்றுவரும்முன்னு முடிவுக்கு வந்தாருங்க. சன்னல் கதவைகளைத் திறந்து வைத்துவிட்டு தூங்கினாருங்க.
காலை எழுந்து பார்த்தப்ப சன்னல் கதவுகள் எல்லாம் மூடியிருந்ததுங்க.
அவருக்கோ ஆச்சரியமுங்க. இரவு சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தோமே, எப்படி யார் சன்னல் கதவுகளை முடியிருப்பாங்க.
சரி சன்னல் கதவுகள் தான் மூடியிருந்ததே அப்பறம் எப்படி காற்று எங்கிருந்து வந்திருக்கும். அவருக்கு ஒன்றும் புரியலைங்க. ஒரே ஆச்சரியம் வேறு.
சரி அறையில் எதையோ திறந்து வைத்தோமே எதைத் தான் திறந்து வைத்தோம் ? என்று குழப்பிபோனாருங்க . அது கனவாக இருக்குமோ என்று கூட நினைத்தாராம்.
ராத்திரி கண்டிப்பா கதவுகளை திறந்தோம். அப்ப சன்னல் கதவுகளைத் திறக்கவில்லை என்றால் எதைத் திறந்தோம் என்று அறையைச் சுற்றிப் பார்த்தாராம். அப்பத்தான் அவருக்கு புரிந்ததாம் அவர் திறந்தது சன்னல் கதவுகளை இல்லையாம் பீரோவின் கதவுகளையாம்.
அது சரி அப்ப பீரோவில் இருந்து காற்று எப்படி வந்திருக்கும் ?. எல்லாம் அவர் மனதில் ஏற்பட்ட நம்பிக்கை தான் காரணம். காற்று சன்னல் கதவுகளைத் திறந்ததால் வருகிறது என்று நினைத்தார் தூங்கிப்போனார். உண்மையில் காற்று வெளியிலிருந்து வரவில்லை அவர் மனதில் காற்று வருவதாக நினைத்துகொண்டார், காற்று வந்தது. அந்த நம்பிக்கை தான் அவருக்கும் தூக்கத்தைக் கொடுத்தது.
எனவே நம்பிக்கை வைத்தால் எதுவும் சாத்தியமே
நம்பிக்கை என்பது உள்மனதில் ஏற்படுகின்ற உள்மன ஆற்றல் .
உங்களுக்கு கூட தெரிந்திருக்குமே மருத்துவர்கள் நோயாளிக்கு Distilled Water யை மருந்து எனச் சொல்லி செலுத்துவதுண்டு. நோயாளியும் அம்மருந்து தன்னை குணப்படுத்தியதாக கருதுவதும் உண்டு அதனை *ப்லேசிபோ விளைவு* எனச் சொல்லுவார்கள்.
எனவே நம்பிக்கை தான் எல்லாவற்றக்கும் அடிப்படை.
நம்பிக்கை வையுங்க உங்கள் மீது உங்கள் செயலின் மீது நம்பிக்கை வையுங்க. பிரச்சனையைக் கண்டு ஓடாதீங்க பிரச்சனையை இருந்தாதான் மனிதன். நம்பிக்கைங்கறது எங்கே இருக்குன்னு தேடாதீங்க உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.

No comments:

Post a Comment