Thursday 18 June 2020

கூகுளில் அதிகம் தேடப்படும் சீனப் பொருட்கள்; டிவிட்டரில் டிரண்டாகும் #BoycottChineseProduct

சிக்கலில் சீனர்கள்....
பாடம் புகட்ட நேரம் வந்தாச்சு.....
கூகுளில் அதிகம் தேடப்படும் சீனப் பொருட்கள்; டிவிட்டரில் டிரண்டாகும் #BoycottChineseProduct
இந்தியர்கள் பெரும்பாலானோர் கூகுளில் சீனப் பொருட்கள் எவை என்பதை தேடி வருகின்றனர்.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்ததை அடுத்து கூகுளில் சீனப் பொருட்கள் குறித்த தேடல்கள் அதிகரித்து வருகிறது.
சீன ஆப்கள், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன ஆப்கள், இந்தியாவில் பயன்படுத்தப்படும் சீன தயாரிப்புகள், சீன தயாரிப்புகளுக்கு மாற்று "ஆகியவை கூகுள் தேடளில் அதிகம் இடம்பெற்றுள்ளது.
எல்லையில் இந்தியா - சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் உறுதிபடுத்தியுள்ளது. அதேபோல, சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் செய்தி வெளியாகி உள்ளது.
ஆனால் சீன அதிகாரிகள் அதுகுறித்து உறுதிபடுத்தவில்லை.
எல்லையில் பதற்றம் அதிகமான நாட்களில் இருந்தே சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற செய்தி நாட்டுப்பற்றுள்ள இந்தியர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் #BoycottChina, #BoycottMadeinChina, #BoycottChineseApps and #BoycottTiktok உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
எல்லையில் நடப்பதை பார்த்து தங்களது எதிர்ப்பை காட்ட பலர் தங்களது தொலைபேசியில் இருந்து டிக்டாக் செயலியை நீக்கியுள்ளனர்.
தொலைபேசிகளில் இருந்து சீன ஆப்களை நீக்க ஒரு ஆப் உள்ளது.
இதற்கிடையில், ஜூன் 16 ம் தேதி இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை பதட்டங்கள் அதிகரித்த பின்னர் புறக்கணிக்கப்பட வேண்டிய 500-க்கும் மேற்பட்ட 'மேட் இன் சீனா' தயாரிப்புகளின் பட்டியலை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் பொம்மைகள், துணிகள், ஜவுளி, ஆடை, அன்றாட பொருட்கள், சமையலறை பொருட்கள், காலணி, கைப்பைகள், மின்னணு மற்றும் அழகுசாதனப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், நகைகள், எழுதுபொருள், காகிதம், வீட்டு பொருட்கள் , சுகாதார பொருட்கள், வாகன பாகங்கள் உள்ளிடவை அடங்கும்.
குறிப்பு;இவைகளை அறிந்த சீனா கலக்கத்துடன் ஏற்றுமதி,இறக்குமதிக்கும் எல்லை பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என கூறியுள்ளது.
அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்புக்கும்,உண்மையான தேச பற்றாளர்களுக்கும் நன்றி!தொடரட்டும் சீனப் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம்..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment