Wednesday 17 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிந்தனைக் களம்
பொறாமை என்பது நம்மை முன்னேற விடாமல் தடுக்கும் ஒரு தடைக்கல்.
பொறாமை என்பது என்ன? பொறாமை என்றால் உங்களுக்குப் பிடித்த ஆனால் உங்களிடம் இல்லாத ஒரு பொருள் மற்றவரிடம் இருக்கும்போது ஏற்படும் உணர்வு. உங்களிடம் இருப்பதைவிட அதிகமாக மற்றொருவரிடம் இருக்கும்போது ஏற்படுவது அல்லது உங்களுக்குள் இருக்கும் ஒருவித குறைபாட்டினால், இன்னொருவரைப் பார்த்தால் தன்னைப் பற்றிய போதாமை உணர்வு மேலோங்குவதுதான் எரிச்சல் அல்லது பொறாமை.
*நீங்கள் ஆனந்தமான உணர்வில் இருந்தால் யாரையும் பார்த்து பொறாமைப்பட மாட்டீர்கள்.* உங்களை விட இன்னொருவரிடம் ஏதோ ஒன்று அதிகம் உள்ளது போலவும் நீங்கள் ஏதோ ஒருவிதத்தில் குறைந்தவர் போலவும் உணர்வதால்தான் இந்த பொறாமை உணர்வு வருகிறது. உங்களைவிட உயர்ந்தவர் ஒருவர் இருக்கும் இடத்தில்தான் உங்களிடம் பொறாமை இருக்கும். இங்கு நீங்கள் மட்டும் இருந்தால் உங்களுக்கு பொறாமை உணர்வு இருக்காது.
நல்ல குணம் பொருந்தியவராக இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் இருப்பதால் இப்புவியில் சில விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அறிவுபூர்வமாக இருக்க வேண்டும் என்ற தூண்டுதல் எப்போதும் இல்லை. நல்ல மனிதனாக இருக்க வேண்டும் என்றே எப்போதும் இந்த சமூகம் ஊக்குவிக்கிறது. ஆனால் ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தம்மை நல்லவன் என்று நம்பிக்கொண்டிருப்பவருடன் வாழ்வது மிகவும் கடினம். அவர் நல்லவர்தான், ஆனால் கடினமான மனநிலையுடன் இருப்பார். நல்லகுணம் இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் பரிதாபம், அனுதாபம், ஏன்... பொறாமை போன்ற தேவையற்ற விஷயங்களை மனிதனிடம் ஊக்குவிக்கின்றது.
உங்களால் முடிந்தால் அடுத்தவருக்கு அன்பு ஒன்றையே அர்ப்பணியுங்கள். அப்படி முடியாவிட்டால் அடுத்தவரை சிறிது கண்ணியத்துடனாவது நடத்துங்கள். அதுவே மிகச் சிறந்தது.

No comments:

Post a Comment