Saturday 13 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

வந்ததை வரவில் வைப்போம்
சென்றதை செலவில் வைப்போம்
சிலருடைய வாழ்க்கை பார்ப்பதற்குச் சீராக
இருக்கும். சிலருடையது சீர்
இல்லாமல் இருக்கும்.
சீராக இருப்பவனைக் கேட்டால்
“என்னங்க உப்புச் சப்பில்லாமல் ஒரே மாதிரி
வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது - அப்ஸ்
அண்ட் டவுன் இருந்தால்தானே
சுவாரசியமாக இருக்கும்" என்பான்.
அடுத்தவனைக் கேட்டால், "என்னங்க, நாய்ப்
பிழைப்பாக இருக்கிறது. எப்போது
நல்ல காலம் வரும்? பணம், காசு வேண்டாங்க,
நிம்மதி வேண்டும்! அந்த நிம்மதி
கிடைக்காமல் அல்லாடிக்கொண்டிருக்கிறேன்"
என்பான்.
எல்லோருக்குமே ஆசைகளும், கனவுகளும்
அதிகமாகி விட்டன! பணத்
தேவைகளும், தேடல்களும் அதிகமாகி விட்டன!
'கம்ப ராமாயணத்தை பற்றியும், பட்டினத்தாரைப்
பற்றியும் எழுதினாலோ அல்லது
எழுதிப்புத்தகமாகப் போட்டாலோ, ஒருத்தரும்
வாங்க மாட்டார்கள். வாங்கிப் படிக்க
மாட்டார்கள்.
'பங்குச் சந்தையில் பணம் பண்ணுவது எப்படி?',
'இருக்கின்ற பணத்தை இரட்டிப்பாக்குவது எப்படி?' என்று எழுதினால் மாய்ந்து
மாய்ந்து படிப்பார்கள். அதுதான்
இன்றைய நிலைமை!
மாருதி வைத்திருப்பவன், டொயோட்டா
வேண்டும் என்பான், டொயோட்டா
வைத்திருப்பவன் பென்ஸ் வேண்டும் என்பான்.
*மொத்தத்தில் இருப்பவனும் நிம்மதியாக இல்லை; இல்லாதவனும் நிம்மதியாக இல்லை.*
சரி வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது?
அதற்கும் வழி இருக்கிறது.
ஒரு சிந்தனையாளன் இப்படிச் சொன்னான்
*🌾Life is 10 percent what you make it and 90 percent how you take it.*
--Irving Berlin
*வருவதை ஏற்றுக் கொள்ளுங்கள்.* அதுதான் -
அந்தக் குணம்தான் இனிய
வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
எல்லா உணவும் ஒன்றுதான். தொண்டை
வரைக்கும்தான் ருசி. அதற்குப் பிறகு அது
பாசுமதி அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்
ஐ.ஆர் 20 அரிசியாக இருந்தாலும் ஒன்றுதான்.
உறக்கம் வரும் வரைதான் இடம்
வேறுபடும். வந்து விட்டால் எல்லா இடங்களும்
ஒன்றுதான். ஃபைவ் ஸ்டார் ஓட்டலாக
இருந்தாலும் சரி அல்லது திண்ணையாக
இருந்தாலும் சரி! உடலை மறைக்கத்தான்
உடை. அது காதியாக இருந்தாலென்ன -
அல்லது பீட்டர் இங்கிலாந்து பிராண்ட்
சட்டையாக இருந்தாலென்ன?"
ஆகவே
வாழ்க்கையை அதன் வழியிலேயே எதிர் கொள்ளுங்கள். எல்லாம் வசப்படும்!

No comments:

Post a Comment