Friday 12 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பயணிகளின் வசதிக்காக மதுரை- விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில்கள் கால அட்டவணை 13.6.2020 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 02636 மதுரை - விழுப்புரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு பதிலாக காலை 8 மணிக்கு புறப்பட்டு திண்டுக்கல்லிற்கு காலை 8.58 மணிக்கும், திருச்சிக்கு காலை 10.10 மணிக்கும், அரியலூருக்கு 11.09 மணிக்கும், விழுப்புரத்திற்கு மதியம் 01.05 மணிக்கும் சென்று சேரும். வண்டி எண் 02635 விழுப்புரம் - மதுரை சிறப்பு ரயில் விழுப்புரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு பதிலாக 14:30 மணிக்கு புறப்பட்டு அரியலூருக்கு மதியம் 03.54 மணிக்கும், திருச்சிக்கு மாலை 05.05 மணிக்கும் திண்டுக்கல்லிற்கு மாலை 06.15 மணிக்கும் மதுரைக்கு இரவு 07.30 மணிக்கும் வந்து சேரும்

No comments:

Post a Comment