Monday 15 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*வெளியுறவுத்துறை செய்திகள்: அமெரிக்கா வில் இயங்கும் உலக நாடுகளில் மத சுதந்திரம் குறித்த அமைப்பு USCIRF -United States Commission for International Religious Freedom*
*காஷ்மீரில் ஆர்டிகிள் 370 யை நீக்கியது, குடியுரிமை திருத்த சட்டம் அனைத்தையும் எதிர்க்கும் அமைப்பு இது.*
*இந்த அமைப்பு தான், சென்னை பல்கலையுடன் இணைந்து ஜூலை மாதம் மதங்கள் குறித்த கருத்தரங்கம் நடத்த இருந்தது. இந்து வெறுப்பு நோக்கம் குறித்த சர்ச்சை எழுந்து நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.*
*இதனை சேர்ந்தவர்கள் பாரதம் வர அனுமதி கேட்டிருந்த நிலையில், அனுமதி கிடையாது என்று திட்டவட்டமாக கூறி மறுத்திருக்கிறது மத்தியஅரசு.*
*இது குறித்து மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள்எழுதி இருக்கும் கடிதத்தில், "பாரத நாட்டின் அரசமைப்பு சட்டம் பாரதிய மக்கள் அனைவருக்கும் மதரீதியான பாதுகாப்பு வழங்கி இருக்கும் போது, இன்னொரு நாட்டின் அமைப்பு அது குறித்து கருத்து கூற முற்படுவது பொருளற்றது. இந்த அமைப்பின் உள்நோக்கம் நிறைந்த செயல்பாடுகளை பாரதம் அறிந்திருப்பதால் இந்த அமைப்பை பொருட்படுத்தத்தக்க ஒன்றாக நாங்கள் பார்க்கவில்லை.'' என்று குறிப்பிட்டிருக்கிறார்.*

No comments:

Post a Comment