Thursday 18 June 2020

95 சதம் வாக்குகள் பெற்று நமது தேசம் ஐ நா வில் பெரும் வெற்றி.

95 சதம் வாக்குகள் பெற்று நமது தேசம் ஐ நா வில் பெரும் வெற்றி.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினர் இடத்துக்கான தேர்தலில் இந்தியா வெற்றி..
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 5 நிரந்தரமல்லாத உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.இந்த நிரந்தரம் இல்லாத உறுப்பினர்கள் இடங்களுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை 10 நாடுகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும்.
இந்த தேர்தலில் ஆசிய பசிபிக் குழுவின் வேட்பாளராக இந்தியா போட்டியிட்டது.
இந்திய நேரப்படி புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. இரவு 11 மணிவரை இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. 192 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா சபையில் முதல் முறையாக சமூக இடைவெளியுடன் வாக்குப் பதிவு நடைபெற்றது.
பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 192 நாடுகளில் 184 நாடுகளின் வாக்குகளை இந்தியா பெற்றது.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரம் இல்லாத உறுப்பினராக 8-வது முறை இந்தியா இடம்பெற்றுள்ளது.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment