Monday 22 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'வாழ்தல் என்பது ஒரு கலை
வெகு சிலருக்கு அது ஓர்
ஆனந்த அலை'
நீங்கள்தான் உங்கள் நண்பன்!
நம்முள் இருக்கும் ஜீவனில்
எல்லாம் இருக்கிறது.
* மகத்தான சக்தி இருக்கிறது.
* எதையும் சமாளிக்கும் இயல்பு இருக்கிறது
* தெரிந்துக்கொள்ளும் முன்
னேறும் ஆர்வம் இருக்கிறது
* அன்பும், கருணையும் இருக்கிறது
* இந்த ஜீவன் வாழ விரும்புகிறது -சாக அல்ல
* எல்லாவற்றையும் அனுபவிக்க விரும்புகிறது - அழுது புலம்ப அல்ல.
சுவாமி விவேகானந்தரும் 'உனக்குள் அளவற்ற ஆற்றலும் அறிவும் வெல்ல முடியாத
சக்தியும் குடிகொண்டுள்ளன. அவற்றை வெளியே ' கொண்டு வாருங்கள்' என்கிறார்.
எனவே உங்களை ஒருநண்பனாக நீங்களே தட்டிக்கொடுத்து அழைத்துச் செல்லுங்கள்.
உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!
சிரித்து மகிழ்ந்து வாழ்ந்துவிடுங்கள்!
கோபமாக இருப்பதை
கோபத்தில் இருப்பவன் உணர்வதில்லை. துக்கமாக இருப்பதை துக்கத்தில் இருப்பவன் அறிவதில்லை.
வாழ்க்கை எனும் கடையில் உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, உண்மை, பரிவு, உதவி என்று பல நல்ல பழக்கங்களையும், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், பொய் என்று பல அழுகிய பழங்களையும் அடுக்கி வைத்திருக்கிறார்கள். இதில் நீங்கள் எதை தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது உங்கள் கைகளில்!
.'என்னால் எதுவும் முடியும். எனக்குள் ஒரு மாபெரும் சக்தி குடிகொண்டிருக்கிறது. ஆண்டவன் என் அருகில் இருக்கிறார். நான் சரியான பாதையில் சென்று
கொண்டிருக்கிறேன்' என்கிற எண்ணங்கள் உள்ளத்தில் ஆழமாக வேர்விடும்போது அது நம்பிக்கையாக, வாழ்வின் லட்சியமாக உருப்பெறுகிறது.இவ்வாறு உற்சாகம், நம்பிக்கை, வலிமை இவற்றை வாழ்க்கையின் லட்சியங்களாக கொண்டால் உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!.

No comments:

Post a Comment