Thursday 18 June 2020

*''உங்களை நீங்களே நேசியுங்கள்..''*

*''உங்களை நீங்களே நேசியுங்கள்..''*
நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும், அழகுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...
ஒவ்வொருவரும் அவரவர் தனித்தன்மையில் அழகுடன் மிளிர்வீர்கள். மிக முக்கியமாக பிறரைப் பார்த்து அவரின் தோற்றத்தையும் உங்களின் தோற்றத்தையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
உங்களை நீங்களே உற்சாகம் கொள்ளும் வாசகங்களையோ அல்லது உங்கள் இலக்கு என்னவோ அதனைஅடைந்தே தீருவேன்,
அதற்கான சிறு முயற்சியை, உழைப்பை இன்றில் இருந்து ஆரம்பிக்கப் போகிறேன் என்று உறுதி மொழி எடுங்கள்.
இலக்கை நிர்ணயித்தால் மட்டும் போதாது அதில் வெற்றி பெறுவேன் என்று நம்ப வேண்டும்.
எப்போதும் வெளியிலிருந்து ஒருவரால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நினைக்காதீர்கள்.
உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் கைகளில் இருக்க வேண்டும். இன்றைக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொள்ளுங்கள்.
இயல்பாகவே மகிழ்ந்திருக்க வேண்டும் என்று நினையுங்கள். தாழ்வு மனப்பான்மையால் உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
மற்றவர்களை விட உங்களை நீங்களே நேசியுங்கள். தோல்வியடைந்தாலோ அல்லது ஏதேனும் தவறு செய்தாலோ அதையே நினைத்து உங்களை நீங்களே வெறுத்து விடாதீர்கள்.
உங்களிடம் குறைகள் இருந்தாலும், அதனையே நினைத்துக் கொண்டிருக்காமல் உங்கள் குறைகளை எப்படி மீட்டெடுப்பது என்று யோசியுங்கள்.
உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கு இல்லை.நிராகரித்தவருக்கே என்பதைப் புரிந்துக் கொள்ளுங்கள்..
மாற்றத்தை‬ வெளியில் தேடாமல் உங்களுக்கு உள்ளேயே தேடுங்கள்.
நாம் எல்லாரும் ஒரு அங்கீகாரத்திற்காக, ஒரு பாரட்டிற்காகத் தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இன்னொருவர் உங்களைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேயிருக்காமல் உங்களை நீங்களே பாராட்டுங்கள்.
இன்று நீங்கள் சமுதாயத்தில் ஒரு முக்கியமானவராக
இருப்பதற்குக் காரணமே உங்களின் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் காரணமேயொழிய வேறு எதும் காரணமில்லை..
உங்கள் கண் முன்னே தெரிவது எல்லாம் வெற்றிப் படிக்கட்டுகளாக இருக்கட்டும்,
வெற்றிப் படிகளில் பயணியுங்கள்.. மற்றவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழுங்கள்..

No comments:

Post a Comment