Friday 12 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

எல்லா உயிர்களிடம் அன்பு செலுத்துவோம்.
அன்பு என்பது நம்மிடமே இருந்தும், ஆனால் நாம் அறியாமல் இருக்கும் சொத்தாகும். அன்பின் முதல் அலையை நாம் நம்மிடம் இருந்து தான் தோற்றுவிக்க வேண்டும்.
அன்பு, பெறுபவரைக் காட்டிலும் கொடுப்பவருக்கே அதிக மகிழ்வைத் தரும் சொத்தாகும். நம்மிடமே இருந்தும் நாம் அறியாமல் இருக்கும் சொத்து.
காலமெனும் பாதையில் அன்பின் காலடிச் சுவடுகள் என்றென்றும் அழியாமல் பதிந்திருக்கும்.
அது மிகவும் பலம் வாய்ந்த எதிரியையும் வெற்றி கொள்ளவல்ல ஆயுதம் ஆகும்.
அன்பு ஒன்று மட்டுமே அனைத்து நாடுகளிலும் செல்லுபடியாகும் நாணயம்.
அன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியது அல்ல. நம் செயல்களின் மூலம் அதை ஒளிரச் செய்ய வேண்டும்.
நாம் அன்புமயமாக மாறும் போது, நமது புலன்கள் அனைத்தும் அன்பின் பாலங்களாக மாறுகின்றன.
எவரது கர்வத்தாலும் வெல்ல முடியாததாக அன்பு ஒன்று மட்டுமே உள்ளது.
அது துன்பத்தைத் தீர்க்கக்கூடிய அருமருந்தாகும். அது தனிமையின் ஊன்றுகோலுமாகும்.
நம் வாழ்வின் அனைத்து வெற்றிகளுக்கும் சரியான அளவுகோலும் அன்பு ஒன்று மட்டுமேயாகும்.
ஆம்.,நண்பர்களே..,
அனைத்து உயிர்களிடத்த்திலும் அன்பாக இருப்பது தான் அன்பு என்பதை நாம் உணர வேண்டும்.
மனம் நிறைந்த அன்பு மட்டுமே நல்ல பலனைத் தரும். உள்ளன்போடு செய்யும் எந்தச் செயலும் மனமகிழ்வை தரும்.
ஆகவே., அனைத்து உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதன் மூலம் நம் வாழ்க்கையும் பிரகாசமாகும்.

No comments:

Post a Comment