Monday 8 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🗞️தமிழன் செய்தி_*
*_கொரோனா தொற்று... கராச்சியில் சிகிச்சை!' -தாவூத் தொடர்பான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சகோதரர்_*
_நிழல் உலக தாதாவாக அறியப்படுபவர் தாவூத் இப்ராஹிம். 1993-ம் ஆண்டு, மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற பல்வேறு புகார்கள் இவர்மீது உள்ளன. தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள தாவூத், தற்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகவும் அந்நாட்டின் உளவுத்துறையான ஐஎஸ்ஐ இவருக்கு ஆதரவு வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது._
*_ஆனால் பாகிஸ்தான் அரசு, இவரும் இவரது குடும்பத்தினரும் அங்கு இருப்பதை நீண்ட காலமாக மறுத்துவருகிறது. டி- நிறுவனம் என்ற பெயரில் நிழல் உலக பிசினஸ், வர்த்தகம், சூதாட்டம் போன்ற பல வேலைகளை இவரும் இவரது கூட்டாளிகளும் செய்துவருகின்றனர். டி - நிறுவனத்தின் திறமைவாய்ந்த துப்பாக்கி சுடுபவரும் சூதாட்டத்தை முழுமையாகக் கவனித்துக்கொண்டு தாவூத்துக்கு வலதுகையாக இருக்கும் சோட்டா ஷகிலும் பாகிஸ்தானில் இருப்பதாகவே கூறப்படுகிறது._*
_இந்நிலையில், தாவூத் இப்ராஹிம்முக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதனால் இருவரும் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாகவும் புலனாய்வு அறிக்கை மூலம் தகவல் வெளியானது. மேலும், அவரது குடும்பத்தினர் மற்றும் காவலாளிகள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுந்தது. இதையடுத்து, கொரோனா பாதிப்பால் தாவூத் இப்ராஹிம் இறந்துவிட்டதாகவும் பல்வேறு வதந்திகள் வெளியாகின. இது, இந்தியா உட்பட பல நாடுகளிலும் கவனம்பெற்றது._
*_இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளிவைக்கும் விதமாக தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம், IANS ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ளார். தான் தற்போது இருக்கும் இடத்தைக் குறிப்பிடாமல் ரகசியமாக தொலைபேசிமூலம் பேசியுள்ள அவர், “பாய் (தாவூத்) நன்றாக இருக்கிறார். ஷகிலும் நன்றாக இருக்கிறார். யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் நலமாக வீட்டில்தான் உள்ளனர். யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார். இந்த சுருக்கமான தொலைபேசி உரையாடலில், தான் பாகிஸ்தானிலும் ஐக்கிய அமீரகத்திலும் பல்வேறு தொழில்கள் செய்வதாக அனீஸ் ஒப்புக்கொண்டுள்ளார்._*
_அனீஸிடம் பேசியிருப்பதாக ஐஏஎன்எஸ் ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தாலும், தாவூத்தும் அவரது மனைவியும் பாகிஸ்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டத்தை மறுக்கவோ உறுதிப்படுத்தவோ அந்தச் செய்தி நிறுவனத்துக்கு கராச்சியில் எந்தவித சோர்ஸுகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது._

No comments:

Post a Comment