Saturday 13 June 2020

சீனாவை நம்பி இந்தியாவை சீண்டிய நேபாளம்..

சீனாவை நம்பி இந்தியாவை சீண்டிய நேபாளம்..
மோடியின் ராஜதந்திரத்திற்கு முன் இனி என்ன ஆகும்..?
இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள லிபு லேக் பகுதியில் கடந்த மே 8ம் தேதி இந்தியா சாலை அமைத்தது.அதாவது உத்தரகாண்ட் மாநிலம் காத்தியபார்க் பகுதியில் இருந்து லிபு லேக் வரை 80 கிமீ பகுதிக்கு சாலை அமைத்தது. நேபாள் எல்லையில் இருந்து 5 கிமீ தூரம் வரை இந்த சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை காரணமாக தற்போது சண்டை வந்துள்ளது. லிபு லேக் பகுதியை நேபாளம் தனக்கு சொந்தமான பகுதி என்று கடந்த சில மாதங்களாக கூறி வருகிறது.
இது எங்களுக்கு சொந்தமான இடம். இந்தியா இதை ஆக்கிரமித்து இருக்கிறது. இந்த இடத்தை மீண்டும் மீட்டு எடுப்போம் என்று கூறி வருகிறது.
நேபாளத்தின் இந்த புதிய தைரியத்திற்கு முழுக்க முழுக்க சீனாதான் காரணம். சீனாவை நம்பி இந்தியாவை கடுமையாக எதிர்த்த நேபாளம் தற்போது பெரிய சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பும் நிலைக்கு சீனாவும் சென்றுள்ளது. ஏனென்றால் இந்தியா - சீனா மீண்டும் ஒற்றுமையாக தொடங்கி வருகிறது. கடந்த ஒரு மாதமாக லடாக் எல்லையில் இந்தியா - சீனா மோதி வந்தது.
ஆனால் தொடர் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியா - சீனா இடையிலான மோதல் தீர்க்கப்பட்டு வருகிறது.
கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை பெரிய அளவில் வாபஸ் வாங்கி இருக்கிறது. இதனால் அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவும் இந்தியாவும் சண்டை போடும். அப்போது உள்ளே புகுந்து இடங்களை பிடுங்கி கொள்ளலாம் என்று நேபாளம் நம்பியது. சீனா - இந்தியா சண்டையின் நேபாளம் குளிர் காயலாம் என்று நினைத்தது. சீனாவை நம்பி மிக தீவிரமாக இந்தியாவை நேபாளம் எதிர்த்தது. சீனாவே இந்தியாவைப் பற்றி தவறாக கனித்துவிட்டு , தற்போது இந்தியாவுடன் சீனா நெருங்கி வருகிறது. இது நேபாளத்திற்கு பெரிய ஏமாற்றமாக மாறியுள்ளது. நேபாளம் தவறாக கால் வைத்துவிட்டது.
இந்தியாவும் - சீனாவும் அமைதியாக போக முடிவு செய்துள்ள நிலையில் இனி என்ன செய்வது என்று தெரியாமல் நேபாளம் குழம்பி வருகிறது. இந்தியா போன்ற பெரிய நாட்டை எதிர்ப்பது கண்டிப்பாக நேபாளம் போன்ற குட்டி தேசத்திற்கு சரியான முடிவாக இருக்காது. இதனால் வரும் நாட்களில் லிபு லேக் பிரச்சனையில் நேபாளம் பின்வாங்கும், அல்லது பேச்சுவார்த்தைக்கு நிச்சயமாக அழைக்கும்.
உதாரணம் மலேசியா..
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த 370வது அரசியல் சாசனப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக்கி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதை, மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் கடுமையாக விமர்சித்தார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக மகாதீரின் குரல் ஒலித்தது.
இதனையடுத்து மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது. மற்றொரு பாமாயில் தயாரிப்பு நாடான இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா பாமாயிலை இறக்குமதி செய்தது.
இதன் காரணமாக மலேசியா பொருளாதரமே ஆட்டம் கண்டது.. மலேசியா பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் முகமது விலகினார்.
அவருக்குப் பதில் முகமது யாசின் மலேசியாவின் புதிய பிரதமரானார். இதன்பின்னர் இந்தியா -மலேசியா உறவில் இணக்கமான சூழ்நிலை திரும்பியது.
இதனால் அரிசி இறக்குமதி தொடர்பாக இந்தியாவுடன் மலேசியா அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்விளைவாக இந்தியாவில் இருந்து 1 லட்சம் டன் அரிசியை மலேசியா இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. இது ஆண்டு இறுதியில் 2 லட்சம் டன்னாக அதிகரிக்க இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவுடனான உறவை புதுப்பிக்கும் வகையில் கச்சா சர்க்கரையை பெருமளவில் இறக்குமதி செய்யப் போவதாகவும் மலேசியா அறிவித்திருந்தது.
தற்போது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெருமளவு அரிசி இறக்குமதிக்கும் மலேசியா முன்வந்திருக்கிறது. இந்த நிலையில்தான் மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதில் இந்திய நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இந்திய நிறுவனங்க்ளுக்கு கணிசமான விலை குறைப்புடன் பாமாயிலை வழங்கவும் மலேசிய நிறுவனங்கள் இப்பொழுதுமுன்வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மலேசியாவுக்கே இந்த நிலை என்றால்..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment