Saturday 13 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சிறு தொழில் செய்பவர்களுக்கு அவசியம் அவசரம்......
*வியாபாரத்திற்கான ஆதார் (உத்யோக் ஆதார்) உங்கள் கடைகளுக்கு வாங்கிவிட்டீர்களா?*
நீங்கள் பெட்டிக்கடை வைத்திருப்பவராக இருந்தாலும் சரி ஃபேக்டரி நடத்துபவராக இருந்தாலும் சரி.. வியாபாரத்திற்கான ஆதார் கட்டாயமாக வாங்கி விடுங்கள்...
*வியாபாரத்திற்கான ஆதார் (உத்யோக் ஆதார்) வாங்குவதால் என்ன பயன்*
அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் பெற, குறைந்த வட்டியில் மானிய கடன் பெற, வரிச்சலுகை பெற, தவணைத் தொகை தவறும் பட்சத்தில் அதில் இருந்து பாதுகாப்பு பெற,சாலை போடுதல் போன்ற அரசு திட்டங்களுக்கு உங்கள் கடையோ நிறுவனமோ பாதிக்கப்பட்டால் அதற்கான அதிகப்படியான நிவாரணம் பெற, முத்திரைத்தாள் கட்டணத்தில் 50% வரை சலுகை பெற, இதுபோல 20 விதமான நன்மைகள் பெறுவதற்கு உங்கள் கையில் இருக்க வேண்டிய முதல் ஆவணம் வியாபாரத்திற்கான ஆதார் எண்தான்.
நீங்கள் தொழில் செய்கிறீர்கள் என்பதற்கான ஆதாரமே வியாபாரத்திற்கான ஆதார் எண் தான்.
மளிகை கடை முடிதிருத்தும் கடை காய்கறி கடை சில்லி கடை லேத் பட்டறைகள் டைலர் கடை ஹோட்டல் டீக்கடை ஜெராக்ஸ் கடை என எந்த தொழில் செய்தாலும் வியாபாரத்திற்கான ஆதார் எண்ணை கட்டாயமாக்க எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
உத்யோக் ஆதார் எடுத்தாள் அதாவது நீங்கள் செய்யும் தொழிலை பதிவு செய்தால் ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்பது முழுப் பொய்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் வருடத்திற்கு 40 லட்சம் வரை வியாபாரம் செய்பவர்கள் ஜிஎஸ்டி எண்ணோ அல்லது ஜிஎஸ்டி வரியோ ஒரு ரூபாய் கூட கட்ட தேவையில்லை என அறிவிப்பு வந்துள்ளது.
உத்யோக் ஆதார் எடுக்கும்பொழுது உங்கள் கடை அல்லது நிறுவனம் மத்திய அரசின் எம்எஸ்எம்இ பட்டியலில் தானாகவே இடம் பிடித்துவிடும் அதனால் அந்த துறைக்கு அரசு ஒதுக்கும் திட்டங்கள் மானியங்கள் வங்கி கடன்கள் போன்றவற்றை பெற முடியும்.
*உத்யோக் ஆதார் எடுக்க தேவையான ஆவணங்கள்*
ஆதார் கார்டு
பான் கார்டு
ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் (ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் கையில் இருந்தால் ஐந்து நிமிடத்தில் சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்)

No comments:

Post a Comment