Friday 19 June 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நாளும் ஒரு நற்கருத்து! (19-06-2020)வெள்ளிக் கிழமை!
ஆசை என்னும் ஏணி!
ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தின் தமிழாக்க புத்தகத்தின் முன்னுரையில் கவியரசர் கண்ண
தாசன் பின்வருமாறு எழுதுகிறார்.
"ஆசை என்பது முதலில் உள்ளத்தைக் கெடுக்கிறது. பிறகு உடலைக்கெடுக்கிறது.
இதன் காரணமாகத் தான் அடிதடி, குத்து வெட்டு,கொலை, களவு அத்தனையும்நடக்கிறது மனிதக்குதிரையின் லகான் மனத்தின் கையில்உள்ளது.மனக்குதிரையின் லகான் ஆசையின் கையில் உள்ளது.இதன் காரணமாகவே தான் கோவிலுக்குப் போகிறவன் கூட கோரிக்கையோடு போகிறான்.அப்பனே சிதம்பரா என்று பம்பரமாக உருள்பவ னும், தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வேஉருள்கிறான்.மனி
தனின் ஆசைக்கு எல்லையேஇல்லை."
என்கிறார்.சின்னக்
கதை ஒன்று நினை வுக்கு வருகிறது.ஒரு நிலக்கிழார் ஒரு அறிவிப்பு செய்தார்.
தனது நிலத்தில் யார் ஒருவன் எவ்வளவு தூரம் ஓடி சுற்றி வருகிறானோ,அவனுக்கு அவன் சுற்றிவந்த அளவு நிலத்தை பரிசாக அளிக்கிறேன் என்றார். இதைக்கேட்ட ஒருவன் ஓடினான். ஓடஓட அவன் மனம் சொன்னது இன்னும் ஓடு, ஓட்டத்தை நிறுத்தாதே!நீ ஓட ஓட நிலம் அதிகம் கிடைக்குமே!என்றது.
தொடர்ந்து ஓடினான் கடைசியில் ஓடமுடி யாமல் மாரடைத்து கீழே விழுந்தவன் இறந்து போனான். இதைப் பார்த்த ஒரு ஞானி இப்படி எழுதினான்.
"இனி அவனுக்கு இவ்வளவு நிலம் தேவையில்லை!ஆறடி நீளமான நிலமே போதும்!"என்கிறார்.
எனவே ஆசை என்பது நிறைவேறி விட்டது என்று நிம்மதியாக இறந்தவர்கள் யாருமே இல்லை!"ஆசையைத்
துறந்தால் மட்டுமே நிம்மதி!"என்பதை உணர்ந்து கோவிந் தனைப் பாடுங்கள்!என்றார் ஆதிசங்கரர். அவரது பஜகோவிந் தத்தின்26ஸ்லோகத்தை, கவியரசர் தமிழாக்கம் செய்துள் ளார். அதனை தினமும் ஒரு முறையேனும் படித்து, ஆசையை துறந்திட முயலுங்கள்!
"முடிவிலாத ஆசைஎன்னும்
படிகள்மீது ஏறிஏறி
முடிவுகாண முடியவில்லையே!
முற்றும்அந்த ஏணிஇன்று
சக்கரத்தைப் போல்சுழன்று
முன்னும்பின்னும் சுற்றல் தொல்லையே!
கொடியகாம குரோதலோப
மோகமென்னும் நான்கைநீக்கு
கொஞ்சும் ஞானம் உனது எல்லையே!
கூடும்இந்த உண்மைதன்னை
அறிகிலாத பேர்களுக்கு
கூடும்வாழ்வும்
அமைதி இல்லையே!
விடியும்போது இரவுஎன்றும்
முடியும்போது காலைஎன்றும்
விபரமின்றிக்
காணும் உள்ளமே!
வேதஞான மாம்பழத்தில்
கீதைஎன்ற சாறுபெய்த
வித்தகத்தைப்பாடு உள்ளமே!"
நாளை மீண்டும் சந்திப்போமா!
தகவல்தந்தோன்
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா
9791033913
aamchennai@gmail.com

No comments:

Post a Comment