Tuesday 5 March 2024

பொறுமை பணிவு . .

 பொறுமை பணிவு . .

சிலரிடம் சில விஷயங்களைப்
புரிய வைக்க கஷ்டபடுவதை விட புன்னகையுடன்
கடந்து செல்வது நல்லது.
தரமற்ற வார்த்தைகளுக்குப் பதில் கொடுக்காதீர்கள்.
அவ்வாறு பதில் கொடுத்தால்
உங்களின் தரம் தான்
குறைந்து விடும்.
நல்லதை எதிரி சொன்னாலும் கேளுங்கள்.
ஆனால் கெட்டதை நண்பன் சொன்னாலும் கேட்காதீர்கள்.
உங்கள் கருத்தினில் நீங்கள் சரியாக இருக்கும்போது
பிறரின் விமர்சனங்கள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
_*பணம் இருந்தால் எல்லாம் சரியாகி விடும் என்று நினைத்தால் அது தவறு.*_
_*நல்ல மனிதர்கள் உடன் இருந்தால் எல்லா பிரச்சனைகள்*_
_*சரியாகும்.*_
_*பணத்தை பார்த்து சேரும் கூட்டம் பணம் தீரும் வரை தான்.*_
_*நட்பு (காதல்)என்பது கண்களையும் கைவிரல்களையும் போன்றது .*_
_*கை விரலில் காயம் பட்டால் கண்கள் அழுகிறது.*_
_*கண்கள் அழுதால் கை விரல்கள் துடைக்கின்றது.*_
_*இருட்டுக்கு பயந்தால் தூங்க முடியாது.*_
_*கஷ்டத்திற்கு பயந்தால் வாழ முடியாது.*_
_*உழைக்க பயந்தால் வளர முடியாது..*_
_*போராட பயந்தால்*_
_*வெற்றி பெற முடியாது.*_
_*பயந்து கொண்டே இருந்தால் வாழ முடியாது.*_
_*பணிவை தேடு அதிகாரம் கிடைக்கும்.*_
_*பொறுமையை தேடு வெற்றி கிடைக்கும்.*_
_*அன்பை தேடு ~ நல்ல உறவு கிடைக்கும்.*_
_*நல்ல எண்ணங்களை தேடு~வாழ்க்கை கிடைக்கும்.*_
_*தேடாமல் எதுவும் கிடைப்பது இல்லை.*_
_*தொலை தூரத்தில் கூட இருந்து விடலாம்.*_
_*ஆனால்*_
_*யாருக்கும் பாரமாக இருந்து விட கூடாது.*_
_*விட்டுக் கொடுக்கும் குணமும் அனுசரித்து போகும் மனசும் இருந்தால்*_
_*வாழ்வில் சுகம் காணலாம்.*_

No comments:

Post a Comment